சார் இது உங்க கார் இல்லை.. ஓ அந்த வண்டியா சாரி.. சசிகலா பெயரை கேட்டதும் உதயநிதி காரில் ஏறிய எடப்பாடி
சென்னை: சசிகலா குறித்து கேள்வி எழுப்பிய போது பதற்றத்தில் அங்கே நிறுத்தி வைத்திருந்த உதயநிதி ஸ்டாலினின் காரில் எதிர்க்கட்சித் தலைவர் ஏற முயன்றபோது அங்கிருந்த காவலர் , சார் இது உங்க கார் இல்லை என தெரிவித்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
தமிழக சட்டசபை கூட்டம் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத் தொடரில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வருகிறார்கள்.
நேற்றைய தினம் சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை கூட்டம் முடிந்ததும் வெளியே வந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் சசிகலா குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்காமல் சிரித்தபடியே நடந்து வந்து கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி அங்கிருந்த ஒரு காரின் கதவை திறக்க முயற்சித்தார். ஆனால் அந்த கார் எடப்பாடி பழனிச்சாமியினுடையது அல்ல. உதயநிதியின் கார்.

காவலர்
உடனே இதை பார்த்த அங்கிருந்த காவலர் சார் சார் இது உங்க வண்டி இல்லை என்றும் உங்களுடையது அந்த வண்டி என்றும் ஒரு வண்டியை காட்டினார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஓ அந்த வண்டியா, சாரி சாரி என அந்த காவலரிடம் கூறிவிட்டு அவரது வண்டி இருக்கும் இடத்தை நோக்கி வந்தார்.

பாதுகாவலரிடம் கடுகடுத்த எடப்பாடி
அப்போது அவருடைய பாதுகாவலரிடம் ஏம்பா நம்ம வண்டிகிட்ட கரெக்ட்டா கூட்டிப் போகமாட்ட.. அந்த வண்டியில போயி... " என சிரித்துக் கொண்டே தெரிவித்து காரில் ஏறி அமர்ந்தார். ஆனாலும் சசிகலா குறித்த கேள்விக் கணைகளுடன் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வியை முன் வைத்தனர்.

ஒரே நிறம் ஒரே மாடல்
அப்போது வணக்கம் என பதிலளித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. உதயநிதி ஸ்டாலினின் காரும் எடப்பாடி பழனிச்சாமியின் காரும் ஒரே நிறத்தில் உள்ளன. ஒரே மாடலாக இருந்ததாலும் சசிகலா குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதாலும் எடப்பாடி பழனிச்சாமி பதற்றமடைந்தார்.
-
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்?












Click it and Unblock the Notifications