சென்னை முழுவதும் கொசுக்களின் ராஜ்ஜியம்.. இதில் கூட ஊழலா.. எடப்பாடி பழனிசாமி கேள்வி
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்கள். திமுக ஆட்சியில் ஊழல் நடைபெறுவதாக அதிமுக குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் கொசுக்களை கட்டுப்படுத்துவதிலும் திமுக ஊழல் செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருப்பது பகீர் கிளப்பியுள்ளது [Edappadi Palanisamy on DMK Mosquito scam].
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் விடியா திமுக ஆட்சி அமைந்த நாள் முதலாக, மக்களின் சுகாதாரத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்படுகிறது. குறிப்பாக, அவர்களின் உடல்நிலையை கடுமையாக பாதிக்கும் கொசு, தெருநாய் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.

கொசுக்கள் அதிகரிப்பு
மழைக் காலம், குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் சூழலில், தமிழகம் முழுவதும் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகப் பெருகி தமிழக மக்களை வாட்டி வதைக்கிறது. குறிப்பாக, அதிகரித்து வரும் கொசுத் தொல்லையால், சென்னை மக்களால் மாலை முதல் இரவு வரை வெளியே தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மழை நீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்கள், குப்பைக் கூளங்களை சரிவர பராமரிப்பு செய்யாத காரணத்தாலே கொசுக்கள் அதிகரித்துள்ளன.
அதிமுக ஆட்சியின்போது, ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தில் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதல், மழைக் காலத்தில் கொசுக்களை ஒழிப்பதற்குத் தேவையான எந்த நடவடிக்கையையும் திமுக அரசு எடுக்கவில்லை. கொசுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றம், ஊடகங்கள் மற்றும் அறிக்கைகள் வாயிலாக அரசின் கவனத்தை ஈர்த்துள்ளேன்.
நடவடிக்கை இல்லை
அப்படி இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கொசு மருந்து அடிக்கும் பணியாளர்களை, அந்தப் பணியை செய்யவிடாமல் திமுக அரசு, அவர்களை சுய விளம்பரப் பணிகளுக்கு பயன்படுத்துவதே கொசு அதிகரிப்புக்கு முக்கிய காரணம். இதனால் கொசுக்களுக்கு கொண்டாட்டம் என்பது போல் சென்னை முழுக்க கொசுக்கள் ராஜ்ஜியம் நடக்கிறது.
கடந்த 2 மாதங்களாக கொசு மருந்து அடிக்கும் பணிக்கு யாரும் வரவில்லை என்று சென்னை நகர மக்கள் புகார் கூறுகிறார்கள். கொசுத் தொல்லையை ஒழிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்டங்களில் புகார் செய்கின்றனர். ஆனாலும், சென்னை மாநகராட்சியும், தமிழக அரசின் சுகாதாரத் துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
16 கோடி எங்கே
இதனால் தமிழக மக்கள் கொசுக்களிடம் மாட்டிக்கொண்டு படாத பாடுபட்டு வருகிறார்கள். சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுக்க கொசுக்கள் அதிகரித்துள்ளன. கொசுக்கடியின் விளைவு காரணமாக சென்னையில் டெங்கு காய்ச்சல் மக்களிடம் விறுவிறு என பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
இந்த மாதம் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வருகின்றன. குறிப்பாக, தேர்வு நேரத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் டெங்குக்கு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த 2025-26ஆம் ஆண்டில் கம்ப்ரஸர் ஸ்ப்ரே, பவர் ஸ்ப்ரே இயந்திரங்கள், கைத்தெளிப்பான்கள், மினி புகையடிக்கும் இயந்திரங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி 16.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததாக கூறப்பட்டது.
இதிலும் ஊழல்
ஆனால், அந்தப் பணம் எங்கே போனது என்பதுதான் கேள்வி? இதிலும் ஊழல் நடந்ததாலேயே கொசுக்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறைந்தபட்சம் கொசுக்களைக்கூட ஒழிக்க முடியாமல், தினமும் போட்டோ ஷூட் நடத்திக்கொண்டு, தன்னைத்தானே பெருமைபேசி வருகிறார் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின்.
மக்களின் உயிரோடு விளையாடும் விடியா திமுக அரசை கண்டிப்பதோடு, உடனடியாக கொசுக்களை ஒழிக்க மருந்தடிக்கவும், கொசு ஒழிப்புப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று வீடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளதா என்று ஆய்வு செய்யவும், காய்ச்சல் முகாம் நடத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். மக்களின் உடல்நலத்தோடு விளையாடும் கொசுக்களை ஒழிக்க வக்கற்று நிற்கும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்"என்றார்.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
தேன்கூட்டில் கல்லெறிந்ததா தவெக? வேலுமணி கிட்ட சிவி சண்முகம் கேட்ட அந்த கேள்வி? அப்ப எடப்பாடி முடிவு? -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications