11 மாவட்டங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக பறந்த உத்தரவு.. மாநாட்டுக்காக எடப்பாடி பழனிசாமி பரபர திட்டம்!
சென்னை: மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தென் மண்டலத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் பிரமாண்டமாக இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, 11 மாவட்ட செயலாளர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் "வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு" நடைபெறுகிறது. மாநாட்டிற்கான கால்கோள் நடும் பணி ஜூலை 9ஆம் தேதி நடந்தது. இந்த மாநாட்டிற்கான பணிகளை சிறப்பாக செய்யும்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்ட நிர்வாகிகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கென பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை மாநாடு: மதுரையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பெருந்திரளாக தொண்டர்களை திரட்டி வர வேண்டும் என்று தென் பகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொண்டர்களை அழைத்துச் செல்வதற்காக மாவட்டம்தோறும் பேருந்துகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாநாட்டிற்கு கூட்டத்தை திரட்டுவது தொடர்பாக 11 தென் மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், "மதுரை மாநாடு சிறப்புடன் நடைபெறுவதற்கு 11 மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் வருகிற 28ஆம் தேதி முதல் நடக்கிறது. இதில் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர். 28ஆம் தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் ஏபிஷா திருமண மண்டபத்திலும், மாலை சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளுடன் முத்து மகாலிலும் 29ஆம் தேதி காலை விருதுநகர் மாவட்டத்தினருடன் சிவகாசி ஜாபோஸ் மண்டபத்திலும், மாலை தூத்துக்குடி நிர்வாகிகளுடன் மாணிக்கம் மகாலிலும் கூட்டம் நடக்கிறது.

11 மாவட்டங்களில் ஆலோசனை: ஜூலை 30ஆம் தேதி காலை நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் மாதா மாளிகையிலும் மாலை தென்காசி நிர்வாகிகளுடன் இசக்கி மகாலிலும், 31ஆம் தேதி காலை தேனி வேலுச்சாமி மண்டபத்திலும் மாலை 3 மணிக்கு மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் மாநாட்டு மைதானத்திலும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி காலை புதுக்கோட்டை மகாராஜா மகாலிலும், மாலை திருச்சி எஸ்.பி.எஸ். மகாலிலும், 2-ந்தேதி காலை கன்னியாகுமரி நிர்வாகிகளுடன் நாகர்கோவிலில் ஒய்.ஆர். திருமண மண்டபத்திலும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் சிறப்பாக செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, மாநாட்டுக்கு பேருந்து பேருந்தாக தொண்டர்களை திரட்டிச் செல்லும் பணிகளை மா.செக்கள் தொடங்கியுள்ளனர்.

மதுரை மாநாடு ஏற்பாடுகள்: கடந்த ஜூலை 16ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். ஆகஸ்ட் 20-ல் மதுரையில் நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாக மதுரை மாநாட்டு குழுவுடன் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. மாநாட்டின் மேடை மற்றும் முகப்புக்காக, டெல்லி செங்கோட்டை, செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, நாடாளுமன்றம், போன்ற வடிவங்களில் அமைக்கப்பட்ட மாதிரிகள் கொண்டு வரப்பட்டன. அதனை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மாநாட்டுக் குழுவினர் பார்த்து இறுதி செய்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக மாநாட்டிற்கான ஏற்பாடுகள், மதுரை மாநாடு எப்படி அமைய வேண்டும், அதில் கலந்து கொள்ளும் தொண்டர்களைத் திரட்டும் பணிகள், மாநாட்டு நிகழ்வுகள் எப்படி அமைய வேண்டும் மற்றும் மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்தே, 11 மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பறந்துள்ளது.
-
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications