60 நிமிடங்களும், 80 சீட்களும்.. எடப்பாடி பழனிசாமி, பாஜக பியூஷ் கோயல் சந்திப்பு.. விரிவடையும் கூட்டணி
சென்னை: தமிழக பாஜக ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று சென்னை வந்துள்ளார்.. பாஜக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்திய நிலையில், அதிமுகவிடமும் இன்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.. இதனால் கூட்டணிக்குள் பரபரப்பும், எதிர்பார்ப்பும் தொற்றிக் கொண்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தனது தேர்தல் தயாரிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களின் பாஜக தலைவர்களுடன் மத்திய தலைமையினர் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர்.
அதிமுக - பாஜக தொகுதி
இதன் ஒரு பகுதியாக, தமிழக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு துணையாக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளிதர் மோகல் ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பின்னணியில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக பொறுப்பு ஏற்றுள்ள பியூஷ் கோயல் இன்று செவ்வாய்க்கிழமை சென்னை வந்துள்ளார். அவருடன் தேர்தல் இணை பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மெகவால் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
எடப்பாடி பழனிசாமி - பியூஷ் கோயல்
தியாகராயநகரில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அவர் சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.. இந்த ஆலோசனை கூட்டம் காலை 10.30 மணியளவில் துவங்கி நடந்தது..
ஆலோசனை கூட்டம் முடிந்ததும், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலுக்கு செல்லும் பியூஷ் கோயல், அங்கிருந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்..
ஒரு மணி நேரம் ஆலோசனை
பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சென்னையில் உள்ள தமது இல்லத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் ஆலோசனை மேற்கொண்டார். ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிகிறது.
அதிமுக, பாஜக இருதரப்பு ஆலோசனைகளுக்குப் பிறகு, சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல ஸ்டார் ஓட்டலில் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
60 நிமிடங்கள்
இந்த பேச்சுவார்த்தையின்போது, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் இணை பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மெக்வால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், மூத்த தலைவர் கே.பி முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, தமிழகத்தில் பாஜக பலம் வாய்ந்த தொகுதிகள் பற்றியும், ஓபிஎஸ், டிடிவி தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்தும் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியிடம் விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல கடந்த 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பெற்ற 20 தொகுதிகளை விட டபுள் மடங்க அதிகமான தொகுதிகளை கேட்டு பெறவும் பாஜக தரப்பு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
கூடுதல் சீட் கேட்கும் பாஜக
கடந்த தேர்தலில், அதிமுக மொத்தம் 28 தொகுதிகளில் 2ம் இடத்தை பிடித்திருந்தது, பாஜக கூட்டணி 11 தொகுதிகளில் 2ம் இடத்தில் முன்னிலை வகித்திருந்தது..
மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 80 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக கூட்டணியை விட முன்னிலை வகித்திருந்தது.. இதுதான் பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய பூஸ்ட்டாக இருந்து வருகிறது. எனவேதான் இந்த முறை கூடுதல் சீட்களை கேட்க முடிவு செய்துள்ளதாம்..
அதாவது ஏற்கனவே பாஜக 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக அடையாளம் கண்டு வைத்து உள்ளது. இதில் இருந்துதான் கூட்டணியில் தொகுதிகளை கேட்கும் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் தன்னை நம்பி வரும் சிறு கட்சிகளுக்கும் சேர்த்து 50 தொகுதிகளை கேட்க முடிவெடுத்துள்ளதாம்.
விரிவடையும் கூட்டணி?
கூட்டணியில் தேமுதிக, பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கட்சிகளை இணைப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றியும் ஆலோசனை நடந்துள்ளது.. இதில் பேசப்பட்டுள்ள விஷயங்களை வைத்துதான், அந்தந்த கூட்டணி கட்சி தலைவர்களை பியூஷ் கோயல் சந்திக்க போகிறாராம்.. அதேசமயம், சிறு சிறு கட்சிகளின் தலைவர்களும் பியூஸ்கோயலை விரைவில் சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்துவார்கள் என்று தெரிகிறது.
இன்றைய தினம்தான் முதல்கட்ட பேச்சுவார்த்தை என்பதால், இதில் உடனடி முடிவு இன்றே எடுக்கப்படுமா தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications