இப்போ வேண்டாம்.. "அதுவரைக்கும்" வெயிட் பண்ணுங்க.. எடப்பாடி போட்ட உத்தரவு.. திக்திக் தவிப்பில் பாஜக
இன்று அதிமுக சார்பாக நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் இது ஆலோசனை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: கடந்த சில நாட்களாக தொடர் மோதல்கள் காரணமாக அதிமுக - பாஜக கூட்டணி முறிகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக பாஜகவினர் வரிசையாக தமிழ்நாட்டில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் திடீரென பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.
மேலும் அண்ணாமலையை விமர்சனம் செய்த திலீப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து உள்ளார்.

மோதல் உச்சம்
OBC அணியின் மாநில செயலாளர் ஜோதி, முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், , திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய் ஆகியோர் அதிமுக அலுவலகத்தில் குவிந்து எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தனர். இந்த நிகழ்வில் எடப்பாடி மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். இது நேற்று லதா - பாஜக மாநில செயலாளர்,உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு வைதேகி - பாஜக ஒன்றிய தலைவர் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு, தாம்பரம் ஆகியோர் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்துள்ளனர்.இதை எதிர்த்து அண்ணாமலை, அமர் பிரசாத் கருத்து சொல்ல, அதற்கு ஜெயக்குமார் பதிலடி கொடுக்க என்று அதிமுக - பாஜக மோதல் உச்சம் தொட்டுள்ளது.

கூட்டணி
இதனால் எங்கே அதிமுக - பாஜக கூட்டணி குறிக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இரண்டு கட்சிகளும் மாறி மாறி மோதிக்கொள்கின்றன. சரமாரியாக தாக்கிக்கொள்கின்றன. வார்த்தை ரீதியாக இரண்டு கட்சிகளும் எல்லை மீறி சென்று உள்ளன. எடப்பாடியின் புகைப்படத்தை தீ வைத்து கொளுத்தும் அளவிற்கு பாஜகவினர் சென்றுள்ளனர். இந்த நிலையில்தான் இரண்டு கட்சிகளின் கூட்டணியும் மொத்தமாக உடைக்கிறதோ என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. இன்று அதிமுக சார்பாக நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் இது குறித்து ஆலோசனை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மாவட்ட செயலாளர்கள்
இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி மகளிர் தின கூட்டத்தில் அதிமுக தலைவர்களிடம் பேசி இருக்கிறார். அதில் முக்கியமான சில தகவல்களை அவர் குறிப்பிட்டு இருக்கிறாராம். பாஜக தலைவர்கள் நம்மிடம் வர காரணம், நாம் வலிமையாக இருக்கிறோம் என்பதால்தான். நாம் ஒற்றை தலைமைக்கு கீழ் மீண்டும் வந்துவிட்டோம். இதனால் கட்சி வலிமை அடைந்து உள்ளது. எனவேதான் பாஜகவினர் இங்கே வருகிறார்கள். மற்றபடி நாம் போய் பாஜகவினரை தூக்கவில்லை. அப்படி பாஜகவினர்தான் நம் மீது புகார் வைக்கிறார்கள்.

பாஜக புகார்
நம்மை பாஜகவினர் சிலர் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். அவர்களுக்கு மூத்த தலைவர்கள் பதில் தருவார்கள். மற்றபடி இதில் மற்ற அதிமுகவினர் கருத்து தெரிவிக்க வேண்டாம். கூட்டணி பற்றி நாங்கள் முடிவு எடுப்போம். அதிமுக- பாஜக கூட்டணி தொடருமா தொடராதா என்று இப்போது முடிவு எடுக்க வேண்டியது இல்லை. தேர்தலுக்கு 2-3 மாதங்களுக்கு முன் முடிவு எடுத்துக்கொள்ளலாம். அதுவரை அமைதியாக இருங்கள். முக்கியமாக கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக எப்படி செயல்படுகிறது, எவ்வளவு இடங்களை பெறுகிறது, தோல்வி அடைந்தால் அதன் மூவ் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு இதில் முடிவு எடுக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறாராம். இதனால் இப்போதைக்கு கூட்டணி விவகாரத்தில் அதிமுக எந்த முடிவையும் எடுக்காது என்கிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications