என்னங்க இது? தெற்கிற்கு போன எடப்பாடிக்கு அடுத்தடுத்த ஷாக்.. மேடையிலேயே வாடிய முகம்.. கவனிச்சீங்களா?

சமீபத்தில் மதுரை சென்ற எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கி உள்ள நிலையில்தான் தென் மண்டலத்தில் தனது வலிமையை உயர்த்திக்கொள்ள எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயன்று வருகிறாராம். ஆனால் கடந்த 1 வாரமாக நடக்கும் சம்பவங்கள் தென் மண்டலத்தில் எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி வென்றுவிட்டார். ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது செல்லும்., பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லும் என்றும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்தான் பொதுக்குழுவிற்கு இன்னும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்காமல் உள்ளது. தேர்தல் ஆணையம் இதில் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுபடியாகும்.

நம்பிக்கை

நம்பிக்கை

பொதுக்குழு வழக்கில் நாம் வென்றுவிட்டோம். இனி சிவில் வழக்குகள் மட்டுமே உள்ளன. அதில் ஓ பன்னீர்செல்வத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாராம். அதோடு பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம். ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத வண்ணம் எடப்பாடி காய் நகர்த்தி வருகிறாராம். ஏப்ரல் இரண்டாம் வாரமே போட்டியின்றி தேர்வாகி, கட்சியை தனது அதிகாரபூர்வ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனைகளைதான் கடந்த வாரம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவர் பேசி இருக்கிறாராம்.

ஆலோசனை

ஆலோசனை

நிர்வாகிகள் சிலர் அதில் பேசுகையில், தென் மண்டலத்தில் நமக்கு ஆதரவு இல்லை. நாம் கொங்கு மண்டல கட்சியாக சுருங்கி விடக்கூடாது. தென் மண்டலத்தில் நாம் அதிக கூட்டம் நடத்த வேண்டும். கட்சியை கொண்டு செல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லி இருக்கிறார்களாம். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியும் பொதுக்குழு தீர்ப்பின் போதே முத்துராமலிங்க தேவர் பெயரை கூறினார், மதுரையை புகழ்ந்து எல்லாம் பேசினார். இந்த நிலையில்தான் தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமி கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.தென் மண்டலத்தில் தனது வலிமையை உயர்த்திக்கொள்ள எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயன்று வருகிறாராம். ஆனால் கடந்த 1 வாரமாக நடக்கும் சம்பவங்கள் தென் மண்டலத்தில் எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

சமீபத்தில் மதுரை சென்ற எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. விமான பயணி ஒருவரை தாக்கிய வழக்கு மட்டுமின்றி செல்போன் திருட்டு வழக்கும் அவர் மீது போடப்பட்டு உள்ளது. கடந்த 11-ந் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு அவர் விமானம் மூலம் வந்தார். அப்போது அவர் பேருந்தில் ஹேங்கரில் இருந்து திரும்பி செல்கையில், உடன் வந்த அமமுக நிர்வாகி ராஜேந்திரன் என்பவர் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ எடுத்தார். அதிமுகவை அழித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றஞ்சாட்டி அவர் வீடியோ எடுத்தார். ,அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியை சேர்ந்த ராஜேஸ்வரன் இப்படி நடந்து கொண்டதை பார்த்து எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார். அவரை எடப்பாடி சமாதானம் செய்ய முயன்றும் சமாதானம் ஆகவில்லை. இதை செல்போன் மூலம் வீடியோ எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து எடப்பாடி பாதுகாலவர் ராஜேஸ்வரனை தாக்கினார். அதோடு அவரின் செல்போனையும் பறித்தார். இதையடுத்தே எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. அதோடு விமான பயணியை தாக்கிய வழக்கு மட்டுமின்றி செல்போன் திருட்டு வழக்கும் அவர் மீது போடப்பட்டு உள்ளது.

சம்பவம்

சம்பவம்

இதோடு சிவகங்கையில் எடப்பாடிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களும் கூட கிழிக்கப்பட்டன. அதன்பின் சிவங்கை கூட்டத்தில் எடப்பாடி பேசிய போதும் பெரிதாக கூட்டம் இல்லை என்கிறார்கள். தென் மாவட்ட செயலாளர்கள் வந்து இருந்தாலும் தொண்டர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி பெரிதாக பேசாமல் அவசரமாக கூட்டத்தை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டதாக கூறப்படுகிறது. தென் மண்டலத்தில் அமமுக, ஓபிஎஸ் தரப்பு வலிமையாக இருப்பதால் அவர்கள் எடப்பாடியை கண்டுகொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. கூட்டம் கம்மியாக இருந்ததால் மேடையிலேயே எடப்பாடி முகம் சுருங்கியதாகவும் கூறப்படுகிறது. தென் மண்டலத்தில் கூட்டங்கள் மூலம் மக்களை ஈர்க்கலாம் என்று நினைத்த எடப்பாடிக்கு இந்த தொடர் சம்பவங்கள் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+