ஓபிஎஸ் சவாலால் ஆஃப்.. இப்ப தூது விட்டார்னு புழுகுறாரு.. “மலிவான பித்தலாட்டம்”! பன்னீர் டீம் கொதிப்பு
சென்னை : "ஏற்கனவே ஓபிஎஸ் விட்ட சவாலால் இன்று வரை பதில் பேசாமல் நவ துவாரங்களையும் மூடிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி இப்போது தூது விட்டார் என புழுகுவது அவரது மலிவான பித்தலாட்டத்தையே காட்டுகிறது." என விமர்சித்துள்ளார் ஓபிஎஸ் தரப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் கட்சியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற்றப்பட்டார். இதனை எதிர்த்து நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் கதவுகளை ஓபிஎஸ் தொடர்ந்து தட்டிக்கொண்டே இருக்கும் சூழலில், அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது.

இதையடுத்து தொண்டர்கள் தன் பக்கம் இருக்கிறார் என்பதை காட்ட திருச்சியில் மிகப்பெரிய அளவில் மாநாடு நடத்தினார் ஓபிஎஸ். தொடர்ந்து மண்டல அளவில் மாநாடுகளை நடத்தவும் அவர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது நிர்வாகிகளிடையே பேசிய ஈபிஎஸ், கட்சியில் மீண்டும் இணைய ஓபிஎஸ் தூது விட்டதாக குறிப்பிட்டார். அதற்கு தலைமை கழக நிர்வாகிகள் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி பேசினார். எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு புயலைக் கிளப்பியது.
எடப்பாடியின் இந்த பேச்சுக்கு பதில் அளித்த ஓபிஎஸ், அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு நான் தூது அனுப்பியதாக இபிஎஸ் கூறுவது பொய்யான தகவல். இது போன்று அவர் தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். அண்டப் புழுகு, ஆகாச புழுகு என்பதற்கான சான்றாக இருக்கிறார் என விமர்சித்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆன சசிகலா அடுத்து முதல்வர் பொறுப்பையும் தான் ஏற்க வேண்டும் என்று வம்படியாக பேசி பன்னீர்செல்வத்தை முதல்வர் பொறுப்பிலிருந்து வாபஸ் வாங்க சொன்னார் சசிகலா . இதனால் ஆத்திரம் கொண்டு பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்க, அந்த நேரத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல வேண்டியது இருந்ததால், எடப்பாடி பழனிச்சாமியை நம்பி அவரை முதல்வர் ஆக்கினார் சசிகலா.
இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் மருது செல்வராஜ், இந்த விவகாரங்கள் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவரது பதிவில், "ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலினை ஓ.பி.எஸ் தனியாக சந்தித்து பேசினார்னு எடப்பாடி சொன்னப்ப, நீ மட்டும் அதை நிரூபிச்சா.. நானும் எனது அரசியல் சகாக்களும் அரசியலை விட்டே போயிடுறோம். அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் நீ மட்டும் அரசியல்ல இருந்து போயிடனும்னு அண்ணன் ஓ.பி.எஸ் சவால் விட்டாரே.

இது குறித்து இன்று வரை பதில் பேசாது நவ துவாரங்களையும் பொத்திக் கொண்ட எடப்பாடி பழனிசாமி இப்போது தூது விட்டாரு காது விட்டாருன்னு புழுகுறது அவரது மலிவான பித்தலாட்டத்தையே காட்டுகிறது. எடப்பாடிக்கு பல்லும் சரியில்ல சொல்லும் சரியில்லை..
கலெக்டர் விடுமுறையில் சென்றால்
டிஆர்ஓ இன்சார்ஜ் ஆக இருப்பார் !
எடப்பாடி
சரி தான்..
ஆனா
அதே கலெக்டர் லீவு முடிஞ்சு வந்ததும்
அதே டிஆர்.ஓ. அதிகாரத்தை கலெக்டருக்கிட்ட திருப்பி ஒப்படைச்சுருவாருல்ல..
உன்னை மாதிரி உசுரோட ஆட்டை மசுரோட முழுங்க மாட்டாரு.." எனத் தெரிவித்துள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications