மெட்ரோ நான் போட்ட விதை.. நினைச்சா கூலிங் கிளாஸோடு போட்டோஷூட் எடுத்திருக்கலாம்.. எடப்பாடி நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடபழனி-பூந்தமல்லி இடையே சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார். மோடியுடன் முதலமைச்சர் விஜய் இணைந்து மெட்ரோவில் பயணித்தனர். முன்னதாக மெட்ரோ முதலமைச்சர் விஜய் மெட்ரோ பாலத்தில் கூலிங் கிளாஸ் போட்டு ஆய்வு செய்த வீடியோவை திமுக விமர்சித்தது. தற்போது அதே பாணியில் எடப்பாடி பழனிசாமி நறுக் விமர்சனம் வைத்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்றைய தினம், தமிழகத்திற்கு வருகை புரிந்து, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தின் வடபழனி-பூந்தமல்லி வழித்தடத்தை துவக்கி வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை சென்னை விமான நிலையத்தில் மகிழ்ச்சியோடு வரவேற்றேன். இந்த திட்டத்தை பொறுத்தவரை, எனது தலைமையிலான அதிமுக அரசு இருந்த போது, இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

edappadi-palanisamy-slams-vijay-over-chennai-metro-scheme

நான் நினைத்திருந்தால் போட்டோஷூட்

மத்திய அரசின் அனுமதி பெற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். மத்திய அரசின் நிதி வராத சூழலிலும், மாநில அரசின் நிதியை ஒதுக்கீடு செய்து, பணிகளை துவக்கிய அரசு அஇஅதிமுக அரசு. மேலும், பிரதமரை பலமுறை நான் நேரில் சந்தித்து இதற்கான நிதி குறித்து கோரிய நிலையில், மத்திய அரசும் நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ரூ.63,246 கோடி ஒதுக்க 2024-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் இன்றைய தினம், வடபழனி - பூந்தமல்லி வழித்தடம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

அதிமுக ஆட்சியில் நாம் விதைத்த விதைகள், தற்போது வரை விருட்சமாவதைக் காண மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பழனிசாமி நினைத்திருந்தால் மெட்ரோ பாலத்தின் மீது கூலிங் கிளாஸ் போட்டு ஒரு போட்டோஷூட், சுரங்கத்தின் அடியில் ஹெல்மெட் போட்டு ஒரு ரீல்ஸ் ஷூட்டிங் எடுத்திருக்க முடியும். ஆனால், அப்படிப்பட்ட ஏமாற்று அரசியலில் எனக்கு ஒருநாளும் உடன்பாடு இல்லை. நாம் பேசக் கூடாது. நம்முடைய செயல்கள் பேச வேண்டும் என்பதை எப்போதும் நம்புபவன் நான்.

நறுக் பதிலடி

யாருடைய ஆட்சி இருந்தாலும், நம்முடைய செயல்கள் தான் தமிழக மக்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது என்ற பெருமிதத்தை நமது திட்டங்கள் இன்றுவரை நமக்கு தந்துக்கொண்டு இருக்கின்றன. இந்த இனிய தருணத்தில், தலைநகர் சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மெச்சத்தக்க பங்காற்றிவரும் மெட்ரோ நிறுவனம் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+