யாருங்க எழுதிக்கொடுக்குறது? வார்த்தையை விட்ட எடப்பாடி.. கொஞ்சம் சுதாரிச்சு இருக்கலாமே.. வந்த சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எழுச்சி பயணத்தில் பேசி வரும் விஷயங்கள் சில கடுமையான விவாதங்களை, விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த பேச்சை யாருங்க எழுதிக்கொடுக்குறது? என்று கேட்கும் அளவிற்கு சில பேச்சுக்கள் தவறாக அமைந்து உள்ளன.

அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகி சில மாதங்களே ஆகின்றன. ஆனால் இந்த கூட்டணியில் இப்போதே ஏகப்பட்ட பிரச்சனைகள் நிலவி வருகின்றன. முக்கியமாக கடந்த சில நாட்களாக அதிமுக - பாஜக கூட்டணிக்கு இடையே கூட்டணி ஆட்சி தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி, இதற்கு அதிமுகதான் தலைமை என்று அமித் ஷா குறிப்பிட்டு இருந்தார். அதாவது அதிமுகதான் தலைமை என்றாலும்.. ஆட்சி தனித்த ஆட்சி அல்ல.. அதிமுக - பாஜகவின் கூட்டு ஆட்சிதான், அதாவது ஆட்சியில் பங்கு எடுப்போம் என்று கூறி இருந்தார். பல ஆங்கில ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்.. ஆட்சியில் பங்கு எடுப்போம் என்று கூறினார். இந்த கூட்டணி வென்றால் தனித்து ஆட்சி அமைக்குமா? கூட்டணி ஆட்சி அமைக்குமா? என்ற கேள்வி கடுமையாக எழுந்துள்ளது.

Edappadi Palaniswami AIADMK

பாஜக பற்றி எடப்பாடி பேச்சு

தனது எழுச்சி பயணத்தில் பாஜக பற்றி பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க அதிமுக ஒன்றும் ஏமாளி அல்ல.. கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும்.. வேண்டாம் என்றால் வேண்டாம்.. அதைப்பற்றி கவலையில்லை என்று நேரடியாகக் கூறியுள்ளார். அதாவது பாஜக என்ன கேட்டாலும் கூட்டணியில் இடம் கிடையாது என்பதை எடப்பாடி பழனிசாமி உறுதியாக கூறி உள்ளார். அதிமுகவின் கூட்டணி ஆட்சி குறித்து நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜக நிர்வாகிகளை விட பாஜக தொண்டர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமி பேச்சு காரணமாக கடுமையாக அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக தலைவர்கள் கூட இதை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக தொண்டர்கள் பலரும் நாங்கள் ஆட்சியில் பங்குபெற மாட்டோம் என்றால்.. ஏன் கூட்டணி வைக்க வேண்டும். நாங்கள் ஏன் அதிமுகவினருக்கு தேர்தல் வேலைகளை செய்ய வேண்டும். எங்கள் தயவு வேண்டாம் என்றால்.. ஏன் அவர்களுக்காக நாங்கள் தேர்தல் வேலைகளை செய்ய வேண்டும்.. என்று கடுமையான விரக்தியில் பேச தொடங்கி உள்ளார்களாம். வெறுமனே தேர்தல் பணிகளை செய்துவிட்டு.. எந்த பதவியும் இல்லாமல் இருக்க.. நாங்கள் ஏன் அதிமுக கூட்டணியில் உழைக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் குரல்களை எழுப்ப தொடங்கி உள்ளனர்.

எடப்பாடி கூட்டணி கட்சி

காட்டுமன்னார் கோவில் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு.. அனுமதி அளிக்கப்படுவதில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்? இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும்.

அடுத்து பாருங்க.. ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. பிரம்மாண்டமான கட்சி.. எதிர்பார்த்துக்கொண்டு இருங்கள்.. வருவதை பாருங்கள்.. ஸ்டாலின் அவர்களே.. பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.. நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் அவர் கூறி 2 மாதங்கள் ஆகப்போகிறது. ஆனால் இதுவரை எந்த கட்சியும் அதிமுக கூட்டணிக்கு வரவில்லை. எடப்பாடி அப்படி பேசியது வெறும் ஆரவாரத்திற்காகத்தானா என்ற கேள்வியும் இதனால் எழுந்துள்ளது.

எடப்பாடி கோவில் பேச்சு

எழுச்சி பயணத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கோவிலை பார்த்தாலே திமுகவிற்கு கண்ணு உறுத்துது. அதை பற்றி நான் சொல்ல கூடாது. சொன்னால் வேறு மாதிரி ஆகிவிடும். நீங்களே புரிந்து கொள்ளுங்கள். கோவிலில் மக்கள் பணம் போடுகிறார்கள். கோவிலை விரிவுபடுத்த பணம் போடுகிறார்கள். மக்கள் கோயில்களின் உண்டியலில் பணம் செலுத்துவது, கோயிலை மேம்படுத்தவே. ஆனால், திமுக அரசு அனைத்து கல்லூரிகளையும் அரசுப் பணத்தில் கட்டாமல், அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் இது ஒரு சதிச்செயல் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள்.

கல்விக்கு செலவு செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், அதை அரசுப் பணத்தில் செய்ய வேண்டும். கோயில் பணத்தை கல்விக்காக செலவு செய்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தற்போது பணம் இருப்பது திமுகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், அது அவர்களின் கண்களை உறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களுக்கு கோயில்கள் மீது விருப்பம் இல்லாத காரணத்தால், கோயில் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் நாங்கள் கோவில் கட்டவில்லையா? சொல்லுங்கள். 10 கல்லூரிகளுக்குள் மேல் கட்டி உள்ளோம். ஆனால் நீங்கள் அப்படியா கட்டுகிறீர்கள். பல மக்கள் எங்களிடம் இந்த புகார்களை வைத்துள்ளனர். கல்வி வேண்டாம் என்று சொல்லவில்லை. கல்வி என்பது முக்கியம். கல்வி என்பது கண் மாதிரி. அதை அரசு கட்ட வேண்டும். அரசு சொந்த பணத்தில் கட்ட வேண்டும். கோவில் பணத்தில் கட்ட கூடாது. சொந்த பணத்தில் கட்டாமல் எப்படி கோவில் பணத்தில் கட்டுகிறீர்கள்.

இப்படி ஒரு அரசாங்கம் தேவையா? இதைத்தான் மக்கள் சதிச்செயலாக பார்க்கிறார். இப்படி ஒரு அரசாங்கம் தேவையா என்று நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். கோவில் நிதியில் கல்லூரி கட்டுவதை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்த்து உள்ளார். ஆனால் அவரின் இந்த பேச்சு கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஏனென்றால் அவரே கோவில் நிதியில் கட்டப்பட்ட கல்லூரி ஒன்றில் கட்டிடம் ஒன்றை திறந்து வைத்தார். 1981ம் ஆண்டில் அருள்மிகு பழனியாண்டவர் பல்தொழில் நுட்பக்கல்லூரி, திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர் மூலம் கட்டப்பட்டது.

இதே கல்லூரியில் நிர்வாக கட்டிடம் ஒன்றை 2017ல் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமி கட்டிடம் ஒன்றை திறந்து உள்ளார், எம்ஜிஆர் கோவில் நிதியில் கல்லூரி ஒன்றையே கட்டி உள்ளார். ஆனால் இப்போது அதே விஷயத்தை எடப்பாடி எதிர்க்க தொடங்கி உள்ளார்.

ஆம்புலன்ஸ் எடப்பாடி பழனிசாமி பேச்சு

வேலூர் மாவட்டம், அணைக்கட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் மக்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ''இந்த அணைக்கட்டு தொகுதி அதிமுகவின் கோட்டை. நான் தொடர்ந்து பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆள் இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை இந்த அரசாங்கம் செய்துவருகிறது.

எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் எதுவும் செய்யமுடியாது.தில்லு திராணி இருந்தால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும். மக்கள் கூட்டத்துக்கு இடையில் இப்படி வந்தால் மக்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது. ஆம்புலன்ஸ்ல நோயாளி யாருமே இல்லாமல், வெறுமனே போகிறது. இதை 30 கூட்டத்தில் பார்த்துவிட்டேன். எதிர்க்கட்சியின் கூட்டம் நடக்கிறது என்றால் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இது குறித்து நாளை காவல் துறையிடம் புகார் கொடுப்போம். மக்களுக்கு தீமை செய்யும் ஆட்சியாகத்தான் இருக்குது திமுக ஆட்சி. அதிமுக ஆட்சியின் திட்டங்களை எல்லாம் நிறுத்தியதுதான் திமுக சாதனை, என்றார்.

இதையடுத்து அதிமுக கூட்டங்கள் அருகே வரும் ஆம்புலன்ஸ் தாக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. எடப்பாடி தவறாக பேசிய விஷயங்கள் காரணமாக ஆம்புலன்ஸ்கள் தாக்கப்படும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது. இப்படி வரிசையாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எழுச்சி பயணத்தில் பேசி வரும் விஷயங்கள் சில கடுமையான விவாதங்களை, விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+