"பாருயா பாரு".. ஓபிஎஸ் வந்ததும்.. கேமராவை பார்த்து எடப்பாடி ஆதரவாளர்கள் காட்டிய போட்டோ.. அதிர்ச்சி!
சென்னை: அழையா திருமணத்திற்கு சென்ற விருந்தாளி போல அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு சென்ற ஓ பன்னீர்செல்வம் மிக மோசமாக இன்று நடத்தப்பட்டு உள்ளார்.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடக்க உள்ளது. சற்று நேரத்தில் கூட்டம் தொடங்கி உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இந்த நிலையில் கூட்டத்திற்கு வந்த ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மூலம் அவமதிக்கப்பட்டனர்.
பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

கூட்டம்
இன்று பொதுக்குழு கூட்டத்திற்கு ஓ பன்னீர்செல்வம் வந்ததும் அவர் கடுமையாக அவமதிக்கப்பட்டார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மிகவும் குறைவாகவே அங்கு குழுமி இருந்தனர். காலை 5 மணி வரை வழக்கு நடந்தது. இதனால் பெரும்பாலான ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தீர்ப்பு எதிராக வரும் என்று நினைத்துக்கொண்டு சென்னைக்கே வரவில்லை. சென்னை பக்கமே இவர்கள் வராத காரணத்தால் எடப்பாடி ஆதரவாளர்களால் பொதுக்குழு நிரம்பி வழிந்தது.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் ஓபிஎஸ் வந்ததும், அவரை பார்த்து போயா.. போயா என்று எடப்பாடி ஆதரவாளர்கள் கத்தினர். மேடை ஏறிய அவரை மேடை ஏற விடாமல் கீழே இருந்த எடப்பாடி ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். சிலர் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினர். இந்த நிலையில் வெளியே ஓபிஎஸ் காரில் இருந்து இறங்கிய போது அவரை பார்த்து அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். வெளியே போயா.. வெளியே போயா என்று மீண்டும் மீண்டும் கூறினர்.

கோஷம்
இதை கண்டுகொள்ளாமல் ஓபிஎஸ் நகர்ந்து சென்றார். இந்த நிலையில்தான் அங்கு இருந்த எடப்பாடி ஆதரவாளர்கள்.. இங்க பாருயா என்று கோஷம் எழுப்பி உடனே அங்கு இருந்த செய்தியாளர்கள் கேமராவை பார்த்து திரும்பினார்கள். கேமராவில் எடப்பாடி போட்டோவையோ காட்டி.. ஓபிஎஸ்.. இவர்தான் எங்க தலைவர். இவர்தான் ஒற்றை தலைமை என்று எடப்பாடி ஆதரவாளர்கள் கூறினர். இன்னும் சிலர் ஓபிஎஸ் போட்டோவை கேமராவை நோக்கி காட்டி ஓபிஎஸ் துரோகி என்று கூறினர்.
Recommended Video

துரோகி
மேடைக்கு ஏற சென்ற போதும் ஓபிஎஸ்ஸை எடப்பாடி நிர்வாகிகள் அவமதித்தனர். இதனால் ஓபிஎஸ் இன்னும் மேடைக்கு ஏறாமல் ஓபிஎஸ் கீழேயே நின்று கொண்டு இருந்தார். பின்னர் வேறு ஒரு அறைக்கு சென்று அவர் அமர்ந்தார். இந்த அதிமுக பொதுக்குழுவில் அதன் ஒருங்கிணைப்பாளர், மூத்த உறுப்பினர் பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் மோசமாக அவமதிக்கப்பட்ட சம்பவம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications