Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தர்ம சங்கடம்".. ஓபிஎஸ் முகத்தை பார்த்ததும் திரும்பிக்கொண்ட வேலுமணி! கண்டுகொள்ளாத மாஜிக்கள்! கொடுமை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று அதிமுக பொதுக்குழுவிற்கு வந்த ஓ பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கடுமையாக அவமதித்தனர். முன்னாள் அமைச்சர்கள் பலர் ஓ பன்னீர்செல்வத்தின் முகத்தை கூட கண்டுகொள்ளாமல் திரும்பி கொண்டனர்.

Recommended Video

    AIADMK பொதுக்குழு கூட்டம் | EPS VS OPS | Oneindia Tamil

    அதிமுக பொதுக்குழு பல்வேறு பிரச்சனைகள், மோதல்கள், போராட்டங்களுக்கு இடையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் நடக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது.

    கூட்டமே இல்லை

    கூட்டமே இல்லை

    இந்த கூட்டத்திற்கு வர தொடங்கியதில் இருந்தே ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஓ பன்னீர்செல்வம் வந்த போது அவரை சாலையில் வரவேற்க பெரிய அளவில் ஆட்கள் இல்லை. சாலையில் எடப்பாடிக்கு கொடுக்கப்பட்டது போல ஓ பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு கொடுக்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த ஓ பன்னீர்செல்வம் வேறு ரூட் எடுத்து வந்தார். அண்ணா நகர் வழியாக ரூட் மாறி பன்னீர்செல்வம் வந்தார்.

    கார் நிறுத்த பிரச்சனை

    கார் நிறுத்த பிரச்சனை

    ஓ பன்னீர்செல்வம் உள்ளே வந்ததும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அவரை எதிர்த்தனர்.அவரின் காரை உள்ளே நிறுத்த விடவில்லை. நீ அதிமுக கிடையாது என்று கூறி மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி அவரை நோக்கி கத்தினர். அதோடு வெளியில் போ.. மேடைக்கு வராதே என்று கூறி மோசமாக கோஷம் எழுப்பினர். இதனால் பார்கிங்கில் பிரச்சனை ஏற்பட்டது.

    வரவேற்க கூட இல்லை

    வரவேற்க கூட இல்லை

    அதன்பின் இந்த பிரச்னையை கடந்து ஓபிஎஸ் மண்டபம் உள்ளே வந்தார். அங்கு நிர்வாகிகளை வரவேற்க வேலுமணி, சி வி சண்முகம் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். ஓபிஎஸ் வந்ததும் சட்டென வேலுமணி முகத்தை திருப்பிக்கொண்டார். ஓபிஎஸ் முகத்தை பார்க்காமல் எடப்பாடி ஆதரவு மாஜிக்கள் முகத்தை திருப்பிக்கொண்டனர். ஓபிஎஸ்ஸை இதனால் வரவேற்பறையில் யாரும் வரவேற்கவில்லை.

    கோஷம்

    கோஷம்


    அதன்பின் உள்ளே சென்றதும் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. ஓபிஎஸ் வெளியேற வேண்டும் என்று கூறி எடப்பாடி ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். ஓபிஎஸ்-ஐ கண்டுகொள்ளாத இபிஎஸ் ஆதரவாளர்கள் மேடையில் அமர்ந்து இருந்த நிலையில் கீழே இருந்த ஆதரவாளர்கள்.. ஹே மேடை ஏறாதே வெளியே போ என்று கூறி கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கும் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

     தர்ம சங்கடம்

    தர்ம சங்கடம்

    இதனால் தொடக்கத்தில் இருந்து ஓபிஎஸ்ஸுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. அவரை சொந்த கட்சி உறுப்பினர்களே அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுக்குழு மூலம் ஆரோக்கியமான விவாதம் நடக்கும். நிர்வாகிகள் சந்தித்துக்கொள்வார்கள். அவர்களிடம் மனஸ்தாபம் தீரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி அமைதியான சூழ்நிலை எதுவும் நிலவாமல் மூன்று முறை முதல்வராக இருந்தவர் அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+