வார்த்தையை விட்ட எடப்பாடி.. கை வைக்க கூடாத இடத்தில் வச்சிட்டாரே.. அமித் ஷாவிற்கு பதிலடி? என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் NDA கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது நடைப்பயணத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பேசி இருப்பது விவாதமாகி இருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்கான கூட்டணி என்று கூறிய அமித்ஷா, திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

vijay tamilaga vetri kazhagam

அமித்ஷா மீண்டும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணி ஆட்சியே நடக்கும் என்பதை உறுதி செய்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட நாள் முதலே அமித்ஷா, கூட்டணி ஆட்சி என்பதை தொடர்ந்து கூறி வருகிறார்.

அமித் ஷாவிற்கு பதிலடி

இப்படிப்பட்ட நிலையில்தான் அமித் ஷாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் NDA கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது நடைப்பயணத்தில் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் கூட்டணி ஆட்சி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இப்படி பேசியது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜக நிர்வாகிகளை விட பாஜக தொண்டர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமி பேச்சு காரணமாக கடுமையாக அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகி சில மாதங்களே ஆகின்றன. ஆனால் இந்த கூட்டணியில் இப்போதே ஏகப்பட்ட பிரச்சனைகள் நிலவி வருகின்றன. முக்கியமாக கடந்த சில நாட்களாக அதிமுக - பாஜக கூட்டணிக்கு இடையே கூட்டணி ஆட்சி தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி, இதற்கு அதிமுகதான் தலைமை என்று அமித் ஷா குறிப்பிட்டு இருந்தார். அதாவது அதிமுகதான் தலைமை என்றாலும்.. ஆட்சி தனித்த ஆட்சி அல்ல.. அதிமுக - பாஜகவின் கூட்டு ஆட்சிதான், அதாவது ஆட்சியில் பங்கு எடுப்போம் என்று கூறி இருந்தார். பல ஆங்கில ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்.. ஆட்சியில் பங்கு எடுப்போம் என்று கூறினார். இந்த கூட்டணி வென்றால் தனித்து ஆட்சி அமைக்குமா? கூட்டணி ஆட்சி அமைக்குமா? என்ற கேள்வி கடுமையாக எழுந்துள்ளது.

அண்ணாமலை - தனிப்பெரும் ஆட்சி

அமித் ஷா கூட்டணி ஆட்சி நடக்கும் என்று கூறி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் பல இடங்களில் தனிப்பெரும் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பதிலில், என் கட்சித் தலைவர் அமித்ஷா 'கூட்டணி ஆட்சி' என பேசிய பின்பும், நான் அதைத் தூக்கிப் பிடிக்கவில்லை என்றால் எதற்கு தொண்டனாக இருக்க வேண்டும்? கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை அமித்ஷா தெளிவுப்படுத்தி விட்டார்; இதில் மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் அதிமுக பேசலாம். கூட்டணி பற்றி அமித் ஷா முடிவு செய்துவிட்டார். அதில் நான் கருத்து சொல்ல முடியாது. ஒரு தொண்டனாக அதை ஏற்றுக்கொள்வேன், என்று கூறி உள்ளார்.

எடப்பாடி பதிலடி

இப்படிப்பட்ட நிலையில்தான் அண்ணாமலை, அமித் ஷாவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் திருவாரூரில் எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலில், பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க அதிமுக ஒன்றும் ஏமாளி அல்ல.. கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும்.. வேண்டாம் என்றால் வேண்டாம்.. அதைப்பற்றி கவலையில்லை என்று நேரடியாகக் கூறியுள்ளார். அதாவது பாஜக என்ன கேட்டாலும் கூட்டணியில் இடம் கிடையாது என்பதை எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக கூறி உள்ளார்.

பாஜகவினர் அப்செட்

அதிமுகவின் கூட்டணி ஆட்சி குறித்து நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜக நிர்வாகிகளை விட பாஜக தொண்டர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமி பேச்சு காரணமாக கடுமையாக அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக தலைவர்கள் கூட இதை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக தொண்டர்கள் பலரும் நாங்கள் ஆட்சியில் பங்குபெற மாட்டோம் என்றால்.. ஏன் கூட்டணி வைக்க வேண்டும். நாங்கள் ஏன் அதிமுகவினருக்கு தேர்தல் வேலைகளை செய்ய வேண்டும். எங்கள் தயவு வேண்டாம் என்றால்.. ஏன் அவர்களுக்காக நாங்கள் தேர்தல் வேலைகளை செய்ய வேண்டும்.. என்று கடுமையான விரக்தியில் பேச தொடங்கி உள்ளார்களாம்.

வெறுமனே தேர்தல் பணிகளை செய்துவிட்டு.. எந்த பதவியும் இல்லாமல் இருக்க.. நாங்கள் ஏன் அதிமுக கூட்டணியில் உழைக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் குரல்களை எழுப்ப தொடங்கி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+