மாற்றுக்கட்சிகளின் முக்கிய பிரமுகர்களுக்கு வலை! ஆஃபர்களை அள்ளி வீசும் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: மாற்றுக்கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை அதிமுகவில் இணைக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் தீவிரமாக முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, அமமுக மட்டுமல்லாமல் திமுகவில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளுக்கும் எடப்பாடி டீம் தூது விடுவது தான் இங்கு கவனிக்கவேண்டியது.

திமுக மாவட்டச் செயலாளர்களோடும், அமைச்சர்களோடும் முரண்பட்டு நிற்கும் கீழ்மட்ட திமுக நிர்வாகிகளை வளைப்பது அதிமுகவின் முதல் டார்கெட்டாக உள்ளது.
குறிப்பாக தேனி தெற்கு மாவட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கம்பம் ராமகிருஷ்ணனுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து நின்று அரசியல் செய்து வரும் திமுக நிர்வாகிகள் சிலரை எடப்பாடி தரப்பிலிருந்து அப்ரோச் செய்யப்பட்டிருக்கிறது.
இதேபோல் இன்னும் பல மாவட்டங்களில் லோக்கலில் உள்ள முக்கியப் பிரமுகர்களை அதிமுக வலையில் விழ வைப்பதற்கான காய் நகர்த்தப்பட்டு வருகிறது.
ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகிவிட்டது, உங்களுக்கு உங்க கட்சித் தலைமை இதுவரை என்ன செய்திருக்கிறது என்பது அதிமுக தரப்பில் வீசப்படும் முதல் கேள்வியாகும்.
அதேபோல் அமமுக நிர்வாகிகளிடமு, ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் வேறு வகையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றனவாம்.












Click it and Unblock the Notifications