தடை நீங்கியது.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த கட்சி
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்றே அதிமுகவின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், 2 ஆயிரத்து 460 உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அதோடு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் வேண்டும் என்றால் மேல்முறையீடு செய்யலாம். ஆனால் இந்த நொடியில் எடப்பாடி பழனிசாமி சார்பாக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் எல்லாம் செல்லும்.

பொதுக்குழு
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேரம் 19ம் தேதியோடு முடிவடைந்தது. இந்த தேர்தலுக்கு எதிராக இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்து இருந்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரமாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வரும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு முன்கூட்டியே மார்ச் 22-ல் விசாரணை செய்யப்படும். 24-ல் தீர்ப்பு வழங்கப்படும், அதுவரை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விசாரணை
இந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை முடிந்த நிலையில் 24ம் தேதிக்கு பதிலாக இன்று 28ம் தேதி தீர்ப்பு ளும் காலி ஆகிவிட்டது என்றே அர்த்தம். அதனால் எடப்பாடி பழனிசாமி சார்பாக பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் எதுவும் செல்லாது, என்று ஓ பன்னீர்செல்வம் வாதத்தில் குறிப்பிட்டு உள்ளார். வழங்கப்பட்டு உள்ளது. முன்னதாக தீர்ப்பு வரும் வரை இதில் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என்று உத்தரவிடப்பட்டது. தற்போது பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

தடை
தற்போது உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை நீங்கிவிட்டது. இதனால் அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்றே அதிமுகவின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இன்றே எடப்பாடி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொதுச்செயலாளர் ஆக வாய்ப்பு உள்ளது. அவரை எதிர்த்து தேர்தலில் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. அதனால் அவர் போட்டியின்றி இன்றி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications