எல்லா "பாக்ஸையும்" டிக் அடித்த எடப்பாடி.. அடுத்த போகஸ் இதுதான்.. "அவரை" உள்ளே இழுக்க போகிறாராமே
சென்னை: பாஜக கூட்டணி முடிவு, உட்கட்சி மோதல்களுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அடுத்தடுத்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் அடுத்த முக்கியமான முடிவு ஒன்றையும் எடப்பாடி பழனிசாமி எடுத்து உள்ளாராம்.
அதன்படி அரசியல் ஆலோசகர் ஒருவருடன் ஒப்பந்தம் செய்ய எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறாராம். ஏற்கனவே மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்த Showtime நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Showtime நிறுவனம் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்தது. அங்கே சிவசேனாவுடன் இரண்டு பிரிவுகள் இடையே கடுமையான மோதல் நிலவியது. அதிலும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவே வலிமையாக இருந்தது. அதை மீறி ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்து அந்த கட்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அந்த நிறுவனத்துடன் ஆளும் திமுக ஆலோசனை செய்து வருகிறதாம்.

இதே அமைப்புதான் ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு சந்திரபாபு நாயுடுவிற்காக பணியாற்றியது. அங்கேயும் சந்திரபாபு நாயுடு வெற்றிபெற இந்த அமைப்பு காரணமாக இருந்தது. இதே குழுவுடன்தான் இப்போது திமுக ஆலோசனை செய்து வருகிறதாம். அதேபோல் ஐபேக் நிறுவனம் வேறு யாருடனும் செல்ல கூடாது என்பதால் அவர்களுடன் திமுக ஒப்பந்தம் செய்துள்ளது.
விஜய் கையில் 2 பேர்
இது போக ஐபேக்கில் இருந்து வெளியாகி உள்ள பிரஷாந்த் கிஷோர் விஜய் உடன் நெருக்கமாக உள்ளார். அதேபோல் விஜய்க்கு பின் அதிகாரபூர்வ ஆலோசகராக இருப்பது ஜான் ஆரோக்கியசாமி என்ற அரசியல் ஆலோசகர். தமிழக அரசியலில் மீண்டும்.. நீண்ட நாட்களுக்கு பின் ஆக்டிவ் ஆகி இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் ஜான் ஆரோக்கியசாமி. திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி ஏற்கனவே பாமகவிற்கு தேர்தல் பணிகளை செய்துள்ளார்.
ஜான் ஆரோக்கியசாமி பாமகவின் பிரபலமான.. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி பிரச்சாரத்தை முன்னெடுத்தார். பாமக அந்த தேர்தலில் சறுக்கினாலும்.. ஜான் ஆரோக்கியசாமி முன்னெடுத்த அந்த பிரச்சாரம் இப்போதும் பிரபலம். வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் வேலை பார்த்த ஜான் ஆரோக்கியசாமி திருச்சிக்காரர்.
எடப்பாடி ஒப்பந்தம் செய்ய போவது யார்?
இப்படிப்பட்ட நிலையில்தான் அரசியல் ஆலோசகர் ஒருவருடன் ஒப்பந்தம் செய்ய எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறாராம். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.
அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. கடைசியாக கடந்த லோக்சபா தேர்தலில் 10வது முறையாக தோல்வி அடைந்து உள்ளது. இதன் காரணமாக டெல்லியை சேர்ந்த அரசியல் ஆலோசகர் ஒருவருடன் ஒப்பந்தம் செய்ய எடப்பாடி பேசி வருகிறாராம். வடமாநிலங்களில் சில தேர்தல்களில் பணியாற்றிய அவர் பாஜக வழியாக அதிமுகவுடன் ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications