எடப்பாடியின் கோட்டையில்! செங்கல்லை உருவிய செங்கோட்டையன்! தவெக வரவேற்பால் இபிஎஸ் ஷாக்! முக்கிய முடிவு
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை பார்த்தது ஷாக் ஆகி உள்ளாராம். ஈரோட்டில் செங்கோட்டையனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.
செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கோரிக்கைகளை வைத்தார். இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் கூட கொடுத்திருந்தார். ஆனால் அவரின் காலக்கெடுவை எடப்பாடி பழனிசாமி ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.
10 நாட்களுக்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறி இருந்தார். ஆனால் அதை எல்லாம் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து டெல்லிக்கு கூட சென்று அமித் ஷாவை சந்தித்து செங்கோட்டையன் முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டார்.
செங்கோட்டையன் முக்கிய முடிவு
ஆனால் இந்த ஆலோசனைகள், சந்திப்புகள் எதுவும் செங்கோட்டையனுக்கு சாதகமாக செல்லவில்லை. செங்கோட்டையனுக்கு இது எதுவும் கைகொடுக்கவில்லை. இறுதியில் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார். டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை தேவர் குரு பூஜையில் சந்தித்தார். இதன் விளைவாக அதிமுகவில் இருந்து உடனடியாக செங்கோட்டையன் தூக்கி அடிக்கப்பட்டார்.

இதையடுத்து தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் திடீரென தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். தவெகவில் இணையும் முன் நேற்று இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்ற கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
செங்கோட்டையன் வரவேற்பு
இப்படிப்பட்ட நிலையில்தான் செங்கோட்டையனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. சென்னையில் விஜயை பார்த்துவிட்டு சென்ற அவருக்கு ஈரோட்டிலும், கோபிச்செட்டி பாளையத்திலும் பிரம்மாண்ட வரவேற்பு தரப்பட்டது. இந்த வரவேற்பை பார்த்து எடப்பாடி பழனிசாமி கடுமையாக அப்செட் ஆகி உள்ளாராம். எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை பார்த்து ஷாக் ஆகி உள்ளாராம்.
நம்முடன் இருந்த போதெல்லாம் இவ்வளவு வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லையே. இப்போது இப்படி பெரிய வரவேற்பு கொடுத்து இருக்கிறார்களே என்று எடப்பாடி அப்செட் ஆகி உள்ளாராம். இன்று அதே கோபிச்செட்டி பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடத்துகிறார் . இதில் 50 ஆயிரம் பேரையாவது கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளாராம்.
இதற்காக பல கோடிகளை செலவு செய்யவும் அவர் ரெடியாக உள்ளாராம். செங்கோட்டையனின் கோட்டையில் தான் எவ்வளவு பெரிய பவர்புல் நபர் என்று காட்ட வேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறாராம். செங்கோட்டையனுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக இதை செய்ய அவர் திட்டமிட்டுள்ளாராம். அதே சமயம் தனக்கு ஆதரவான தலைகள், மக்கள் யாரும் எடப்பாடியை பார்க்க செல்ல கூடாது என்ற உத்தரவை போடுவதோடு.. இந்த கூட்டத்தை தோல்வி அடைய செய்வதற்கான வேலைகளையும் செங்கோட்டையன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறாராம்.
இந்த கூட்டத்தை எப்படியாவது வெற்றிகரமாக நடத்தி.. செங்கோட்டையனுக்கு தனது பவரை காட்ட எடப்பாடி கிட்டத்தட்ட சபதம் போட்டுள்ளார் என்கிறார்கள்.. விவரம் அறிந்தவர்கள்!
அப்போ தமிழ்நாட்டில் இரண்டு பேருக்கு இடையில்தான் போட்டி போல.. ஒன்னு எடப்பாடி.. இன்னொன்னு செங்கோட்டையன்!
-
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
தவெகவில் இணைந்த ஜாய் கிரிசில்டா.. பெண்களுக்காக குரல் கொடுக்கவே அரசியலுக்கு வந்ததாக பேட்டி! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்! -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்












Click it and Unblock the Notifications