வார்த்தையை விட்ட எடப்பாடி.. முகம் சிவந்த ஸ்டாலின்! "ஏ பாதம் தாங்கி பழனிசாமி".. செதில் செதிலா விளாசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக குடும்பக் கட்சிதான் - கோடிக்கணக்கான குடும்பங்களை வாழ வைக்கின்ற கட்சிதான் திமுக. வாய்ச்சவடால் விடக்கூடாது பழனிசாமி இன்னும் தரையிலேயே ஊர்ந்துட்டு இருக்காரா? என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுக்கும்.. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நேற்று காரசாரமான விவாதம் நடந்து உள்ளது. ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டத்தில் திமுக அரசை கடுமையாக தாக்கி பேசினார். முதல்வர் ஸ்டாலின் இதற்கு மாலையே திமுக பாசறை கூட்டத்தில் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

ஒரே நாளில் இவர்கள் மாறி மாறி பேசிக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் தீயாக பரவி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் திமுக - அதிமுக இடையே முறையான வார்த்தை போர் ஏற்பட்டு உள்ளது.

Edappadi Palanisamy vs M K Stalin: War of words between leaders in Tamil Nadu all of a sudden

எடப்பாடி சொன்னது என்ன?: நேற்று எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுக நடத்துவது குடும்ப ஆட்சி. இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை மகனை அமைச்சராக்கியது. அதிமுக ஒன்றும் பாஜகவின் B டீம் கிடையாது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் வைப்பது. ஆனால் கட்சியின் கொள்கை நிலையானது, அதிமுக ஒன்றும் பாஜகவின் B டீம் கிடையாது, நாங்கள்தான் ஒரிஜினல் A டீம்.

திமுக ஆட்சியில் சினிமா துறை ஒரு, குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது, சாதகமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி; பிறருக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அதிமுகவின் திட்டங்களை காப்பி அடித்து ஸ்டாலின் ஆட்சி செய்கிறார். ஸ்டாலின் கொண்டு வரும் திட்டங்கள் எல்லாம் நாங்கள் அறிவித்த திட்டங்கள்தான்.

( கொங்கு மண்டலத்தில்.. வம்பிழுத்த அண்ணாமலை.. மீனாய் துடிக்கும் எடப்பாடி.. வச்ச கண் வாங்காத டெல்லி)

நாங்கள் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றி ஸ்டாலின் ஆட்சி செய்கிறார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள், என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்து இருந்தார்.

ஸ்டாலின் பதிலடி: இதற்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதிலடியில், மூன்று வேளாண் திட்டங்களை ஆதரித்த போலி விவசாயி பழனிசாமிக்கு இதெல்லாம் எப்படி தெரியும்? இந்த திட்டங்கள் எல்லாம் பழனிசாமி கண்ணுக்கு ஏன் தெரியவில்லை. இன்னும் தரையில் தான் ஊர்ந்துகொண்டிருக்கிறாரா?.

Edappadi Palanisamy vs M K Stalin: War of words between leaders in Tamil Nadu all of a sudden

அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களை, நாங்கள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறோம் என்று பச்சைப் பொய் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி! மகளிர் உரிமைத் திட்டம் நீங்கள் போட்ட திட்டமா? விடியல் பயணம் நீங்கள் போட்ட திட்டமா? காலை சிற்றுண்டி திட்டம் நீங்கள் போட்ட திட்டமா? நான் முதல்வன் திட்டம் அதிமுக திட்டமா? இல்லம் தேடி கல்வி திட்டம் யார் திட்டம்?

திமுக குடும்பக் கட்சிதான் - கோடிக்கணக்கான குடும்பங்களை வாழ வைக்கின்ற கட்சிதான் திமுக. வாய்ச்சவடால் விடக்கூடாது பழனிசாமி இன்னும் தரையிலேயே ஊர்ந்துட்டு இருக்காரா? கொஞ்ச தலையை தூக்கித்தான் பாருங்களேன். நாங்கள் செய்யும் நல்லது எரியும்.

தரையில் ஊர்ந்து கொண்டே இருந்தால் நாங்கள் சொல்வது, செய்வது உங்களுக்கு எப்படி தெரியும். எடப்பாடி பழனிசாமி பேசியது பேச்சல்ல; வயிற்று எரிச்சல். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து பச்சைப்பொய்யை பேசுகிறார் பழனிசாமி.

திமுக குடும்பக் கட்சி என இ.பி.எஸ். சொல்கிறார். ஆமாம், அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன் திமுக குடும்பக் கட்சிதான். கோடிக்கணக்கான குடும்பங்களை வாழவைக்கும் கட்சிதான் திமுக! சம்மந்திக்கும், சம்மந்தியோட சம்மந்திக்கும் டெண்டர் கொடுத்து, ஐகோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் ஓடிட்டு இருக்கும் உங்களுக்கு, இதைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கு, என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+