கொங்கு மண்டலத்தில்.. வம்பிழுத்த அண்ணாமலை.. மீனாய் துடிக்கும் எடப்பாடி.. வச்ச கண் வாங்காத டெல்லி

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்; பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது தனது நடைப்பயணத்தை கொங்கு மண்டலத்தில் மேற்கொண்டு வருகிறார். அங்கே அவர் மேற்கொண்டு வரும் அரசியல் அதிமுக பிரஷருக்கு உள்ளாக்கி உள்ளது.

அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக கூட்டணி என்பது இனி நடக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது.

இஸ்லாமியர்கள் எதிர்பார்த்தது போல இந்த கூட்டணி முறிந்துவிட்டது. இந்த கூட்டணியை நாங்கள் முறிக்கவில்லை. எங்கள் தொண்டர்கள்தான் முறித்தனர். இந்த கூட்டணி முறிவதற்கு காரணம் எங்கள் தொண்டர்களின் கோரிக்கைதான். அவர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டணியை முறித்து உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.

Why is Annamalai attacking AIADMK and Edappadi Palanisamy all of a sudden and What is the reason?

விமர்சனம் செய்யவில்லை: ஆனாலும் பாஜகவை எங்கும் விமர்சனம் செய்யாமல் எடப்பாடி மௌனம் காத்து வருகிறார். டெல்லி பாஜகவுடன் அன்பான உறவை கடைபிடிக்கும் விதமாக தொடர்ந்து பாஜகவை விமர்சனம் செய்யாமல் எடப்பாடி பழனிசாமி மௌனம் காத்து வருகிறார்.

ஆனால் இன்னொரு பக்கம் அண்ணாமலையோ அதிமுகவை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளார். கொங்கு மண்டலத்தில் நடைப்பயணத்தில் இருக்கும் அண்ணாமலை அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதிமுக தலைகளை கடுமையாக தாக்கி பேசிக்கொண்டு இருக்கிறார். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை.. இந்த நிலையில் அதே கொங்கில் அதிமுக தலைகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை அண்ணாமலை வைத்துக்கொண்டு இருக்கிறார்.

( பங்காரு அடிகளார் மறைவால்.. பட்டென கலங்கிய மோடி! நட்டாவிற்கு போன )

சண்டைக்கு வா.. சண்டைக்கு வா என்று வடிவேலை சின்ன பையன் கூப்பிடுவது போல.. அதிமுகவை சண்டைக்கு வர வேண்டும் என்று அண்ணாமலை வம்பிழுத்துக்கொண்டு இருக்கிறார்.

Why is Annamalai attacking AIADMK and Edappadi Palanisamy all of a sudden and What is the reason?

பாஜக முயற்சி: இப்படி சண்டைக்கு அழைப்பதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பாஜகவை விமர்சனம் செய்ய வைக்க பாஜக முயன்று வருகிறதாம். பாஜகவை எடப்பாடி விமர்சனம் செய்தால் டெல்லி பாஜக கோபம் அடையும். தற்போது டெல்லி பாஜகவிற்கு எடப்பாடி மீது ஒரு சாப்ட் கார்னர் உள்ளது. அதுவே எடப்பாடி டெல்லியை விமர்சனம் செய்தால் பாஜக கண்டிப்பாக கோபம் அடையும். இப்போது உள்ள சாப்ட் கார்னர் கண்டிப்பாக காணாமல் போகும்.

5 மாநில தேர்தலுக்கு பின் எடப்பாடிக்கு எதிராக பாஜக திரும்பும் வாய்ப்புகள் கூட உள்ளன. எடப்பாடிக்கு எதிராக பாஜக நடவடிக்கைகளை கூட எடுக்கலாம். முக்கியமாக அதிமுக வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தொடங்கப்படலாம். சசிகலா மீண்டும் அதிமுக உள்ளே வருவதற்கு தீவிரமாக முயன்று கொண்டு இருக்கின்றனர். அப்படி இருக்க.. ஓ பன்னீர்செல்வம் - சசிகலா ஆகியோர் ஆதரவாக டெல்லி களமிறங்கும் வாய்ப்புகள் உள்ளன.

அல்லது முக்கியமான வழக்குகளில் எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவிற்கு எதிராக பாஜக திரும்பும் வாய்ப்புகள் உள்ளன. இதனால்தான் தற்போது எடப்பாடி பழனிசாமியை பாஜகவிற்கு எதிராக இழுக்க அண்ணாமலை முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே எடப்பாடி மற்றும் அதிமுக தலைகளுக்கு எதிராக பேசி கொங்கில் அண்ணாமலை வம்பிழுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+