மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு
சென்னை: தமிழக பெண்களின் வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத்தொகை 1000 வந்து சேர்ந்துள்ளது. புதிய அரசு பதவியேற்றதில் இருந்தே இத்திட்டங்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலையில் இருந்த குடும்பத் தலைவிகள், தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். ஆனாலும் தேர்தல் களத்தில் தவெக கொடுத்த மெகா வாக்குறுதியான அந்த ரூ.2500 எப்போது கைகளில் கிடைக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த பெண்களையும் ஆவலோடு காத்துக் கிடக்க வைத்துள்ளது..!
சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேற்று திடீரென ஒரு முக்கியத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு அமைந்துள்ள சூழலில், கடந்த சில நாட்களாகவே பெண்கள் மத்தியில் ஒருவித பதற்றமும் குழப்பமும் நீடித்து வந்தது. முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மாதாந்திர நிதியுதவித் திட்டம் தொடருமா அல்லது தற்காலிகமாக நிறுத்தப்படுமா என்ற சந்தேகம் அதிகரித்தபடியே வந்தது.
ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் நேரடியாக செலுத்தப்படுவது வழக்கம்.
இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 1.31 கோடிப் பெண்கள் தொடர்ச்சியாகப் பயன் அடைந்து வருகிறார்கள்.. முன்னதாக, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அரசியல் களம் மாறியதைத் தொடர்ந்து இத்திட்டத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்தன.
ரூ.2500 பெண்களுக்கு உரிமைத்தொகை
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.2500 உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற அதிரடி வாக்குறுதியை அளித்தார்.
இந்த தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றி பெற்று, கடந்த மே 10ம் தேதி தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்று புதிய ஆட்சியை அமைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் விவாதத்தில், திமுக அரசின் இந்த திட்டங்கள் தொடருமா என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்து பேசியிருந்த முதல்வர் விஜய், முந்தைய திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொய்வின்றித் தொடரும் என்று மிகத் தெளிவாக அறிவித்தார்.
தவெக அரசு குட்நியூஸ் தருமா
திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மட்டுமின்றி, கல்லூரி மாணவர்களுக்கான புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் ஆகிய இதர திட்டங்களும் தவெக ஆட்சியில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு, அவற்றின் பயனாளிகளுக்கும் தலா ரூ.1,000 வங்கிக் கணக்கில் நேற்று சரியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்றும், இத்திட்டத்தை "மதிப்புமிகு மகளிர் திட்டம்" என மறுசீரமைக்க அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் கடந்த மாதமே முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ரூ.2500 வங்கிக் கணக்கில் எப்போது
முதலமைச்சரின் இந்த அறிவிப்பு, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை முழுமையாக நிறுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஒருபுறம் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அந்த அதிர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கடந்த மாதத்தைப் போலவே இந்த ஜூன் மாதத்திற்கான உரிமைத் தொகையான 1000 ரூபாயும் பெண்களின் வங்கிக் கணக்கில் நேற்று சரியாக வரவு வைக்கப்பட்டது.
இந்தத் தொகை வரவு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 60 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படவுள்ள ரூ.2,500 எப்போது நிறைவேற்றப்படும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வரும் ஜூன் 22ம் தேதி தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகி, அடுத்த மாதம் அதாவது ஜூலை முதல் ரூ.2,500 கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேசமயம், ஏற்கெனவே மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் அடைந்து வரும் 1.31 கோடி பெண்களுக்கு இந்த 1000 ரூபாயானது நேரடியாக 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுமா? அல்லது தவெக அரசின் புதிய விதிமுறைகளின்படி புதிதாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதன் மூலமாகப் புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்களா? என்ற விவாதமும், குழப்பமும் தற்போதைய சூழலில் பெண்கள் மத்தியில் தீவிரமாக நிலவி வருகிறது. புதிய அரசின் ஜூன் 22 அறிவிப்புக்காக ஒட்டுமொத்த தமிழகப் பெண்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications