குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக
சென்னை: சட்டசபை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் குத்துவிளக்கு ஏற்ற அழைத்த போது முதல்வர் விஜய், மற்றவர்களுக்கு தராமல் விளக்கில் இருந்த 5 திரிகளையும் தானே ஏற்றியது விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஐடி விங் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: விழாவில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தால், ஒரு திரியை பற்ற வைத்து விட்டு, மற்ற விருந்தினர்களிடம் மெழுகுவர்த்தியை அளிப்பதே மாண்பு, மரபு!

பேரவைத் தலைவருக்கோ, அவை முன்னவருக்கோ கொஞ்சம் கூட மதிப்பு அளிக்காமல், சட்டப்பேரவை நடத்தும் நிகழ்ச்சியில் தானே மொத்த விளக்கையும் ஏற்றுகிறார்
@actorvijay
ப்ரோ...
இதெல்லாம் Narcissistic Behaviour இல்லையா ப்ரோ?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
(பி.கு. : "அஞ்சு விளக்கையும் நானே ஏத்துறேன்...
எப்படியாச்சும் காப்பாத்து கருப்பா" ன்னு வேண்டிட்டு ஏத்துனீங்களோ?) இவ்வாறு அதிமுக ஐடி விங் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக அதிக இடங்களில் வென்று சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது. தற்போதைக்கு தமிழகத்தில் உள்ள 229 எம்எல்ஏக்களில் சுமார் 145 பேர் புதுமுகங்கள். இவர்களில் தவெகவினர் மட்டும் 101 பேர் முதல்முறையாக எம்எல்ஏவாகியுள்ளனர்.
சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் வரும் ஜூன் 18ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக எம்எல்ஏக்களுக்கு சட்டசபை நடவடிக்கைகள் குறித்து 2 நாள் பயிற்சி இன்று தொடங்கியது.
ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்து சட்டசபை கூடுவதற்கு முன்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களுக்கும் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த முறையும் 17ஆவது சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களுக்கும் 2 நாள் பயிற்சி முகாம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்றும் நாளையும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.
இதில் சட்டசபை விதிகள், எம்எல்ஏக்கள் எப்படி செயல்படுவது உள்ளிட்டவை குறித்து எம்எல்ஏக்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். புத்தாக்க பயிற்சியை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவருடன் அமைச்சரும் அவை முன்னவருமான செங்கோட்டையன், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், தவெக கொறடா சபரிநாதன் உள்ளிட்டோர் இருந்தனர். விழாவில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வில் ஒரு பெரிய குத்துவிளக்கில் 5 திரிகளையுமே முதல்வர் விஜய் ஏற்றினார்.
இது தற்போது விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. பொதுவாக ஒரு நிகழ்வில் குத்துவிளக்கேற்றினால் அதில் ஒவ்வொரு திரியையும் அங்கிருக்கும் சிறப்பு விருந்தினர்கள் ஆளுக்கு ஒன்று என ஏற்றுவது வழக்கம். ஆனால் இந்த நிகழ்வில் உடனிருந்த சபாநாயகர், அவை முன்னவர் உள்ளிட்டோருக்கு தராமல் விஜய், தானே மொத்தத்தையும் ஏற்றிவிட்டார். ஒரு வேளை அவருக்கு இந்த சம்பிரதாயம் தெரியாமல் கூட இருந்திருக்கலாம் என்கிறார்கள் வேறு சிலர்!
-
மக்களின் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு கால்ஷீட் எப்போது? சவடால் விட்டீங்களே?விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications