எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு
பெங்களூரு: பெங்களூரு ஓசூர் ரோடு மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி வழித்தடத்தில் காணப்படும் எக்கச்சக்கமான டிராபிக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நம்ம மெட்ரோவின் "எல்லோ லைன்" திட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பொதுமக்கள் மற்றும் ஐடி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக, 13-வது புதிய மெட்ரோ ரயில் பெட்டிகள் ஹெப்பாகோடி பணிமனைக்கு வந்தடைந்துள்ளன. இதன் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா?
பெங்களூரு மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதிலும், ஐடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் தினந்தோறும் பயணத்தை எளிதாக்குவதிலும் நம்ம மெட்ரோ மிக முக்கியப் பங்காற்றி வருகிறது.

ஓசூர் ரோடு வழியாக எலக்ட்ரானிக்ஸ் சிட்டி வருவதற்குப் பொதுமக்கள் பல வருடங்களாகவே ஏகப்பட்ட சிரமங்களை சந்தித்து வந்தனர். அங்கு அமைக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் ஓரளவுக்கு பலன் தந்தாலும், அதிகரித்து வரும் தனிநபர் வாகனங்கள் மற்றும் மக்கள் தொகையால் போக்குவரத்து நெரிசல் மீண்டும் அதிகமாகிவிட்டது.
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி - சில்க் போர்டு
இதற்கெல்லாம் நிரந்தரத் தீர்வாகக் கொண்டு வரப்பட்ட எலக்ட்ரானிக் சிட்டி வழியிலான நம்ம மெட்ரோவின் 19.75 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லோ லைன் வழித்தடம் மக்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. இருந்தாலும் இந்த எல்லோ லைன் மெட்ரோ வழித்தடத்தின் தேவையான எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து புகார்களை சொல்லி வந்தார்கள்.
உடனே இதற்கும் தீர்வு காணும் வகையில் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் படிப்படியாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்போது இந்த வழித்தடத்தில் மொத்தம் 10 ரயில்கள் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதால், பணி நேரங்களின் போது பயண இடைவெளி நேரம் 7 நிமிடங்களாக உள்ளது.
பிரம்மாண்ட டிரெய்லர்கள்
இந்த நிலையை மாற்றுவதற்காகவே நேற்று அதாவது ஜூன் 16ம் தேதி, இந்த எல்லோ லைன் வழித்தடத்திற்கான 13-வது புதிய மெட்ரோ ரயில் பெங்களூருவில் உள்ள ஹெப்பகோடி பணிமனைக்கு வெற்றிகரமாக வந்தடைந்துள்ளது.
6 பெட்டிகளைக் கொண்ட இந்த புதிய ரயில், பிரம்மாண்ட டிரெய்லர்கள் மூலம் கொண்டு வரப்பட்டு தற்போது பணிமனையில் ஒவ்வொரு பெட்டியாக இறக்கப்பட்டு, அவற்றை ஒருங்கிணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த புதிய ரயிலுக்கு முன்னதாக வந்த மேலும் 2 புதிய ரயில்கள் ஏற்கனவே தங்களின் இறுதிகட்டச் சோதனைகளில் இருப்பதால், அவை இன்னும் சில வாரங்களில் தடையின்றி மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.
இப்போது வந்துள்ள 13-வது ரயில் பெட்டிகள் ஹெப்பாகோடி பணிமனையில் முழுமையாக அசெம்பிள் செய்யப்பட்ட பிறகு, அவற்றின் தொழில்நுட்ப தன்மைகளை பரிசோதிக்க இன்ஸ்பெக்ஷன் பே லைனுக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாம்.. அங்கு முதற்கட்ட சோதனைகள் முடிந்ததுமே, இந்த மெட்ரோ ரயில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தண்டவாளத்தில் இறங்குவதற்கு முன்னதாக, பிரதான வழித்தடத்தில் சுமார் 750 கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கிப் பார்க்கப்படும்.
பகல் நேரத்தில் பயணிகள் வசதிக்காக வழக்கமான ரயில்கள் இயக்கப்படும் என்பதால், இந்த புதிய ரயிலின் சோதனை ஓட்டம் முழுவதும் இரவு நேரங்களிலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எல்லோ லைனிற்கு வரும் ரயில்கள்
அடுத்தகட்டமாக கொல்கத்தாவில் உள்ள திடாகர் ரயில் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து 14வது மற்றும் 15வது ரயில்கள் வரும் ஜூலை மாதம் பெங்களூருவிற்கு அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் எல்லோ லைனிற்கு ஆர்டர் செய்யப்பட்ட அனைத்து 15 ரயில்களும் முழுமையாக வந்து சேர்ந்துவிடும்.
வரும் ஆகஸ்ட் 11ம் தேதியுடன் நம்ம மெட்ரோவின் எல்லோ லைன் வழித்தடம் தொடங்கப்பட்டு அதன் முதலாம் ஆண்டு நிறைவடைய போகிறது.. எனவே இந்த முதலாம் ஆண்டு நிறைவு விழாவிற்குள், ஆர்டர் செய்யப்பட்ட மொத்தம் 15 ரயில்களையும் முழுமையாக செயல்பாட்டிற்கு எடுத்து வர பிஎம்ஆர்சிஎல் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
7 நிமிடங்களில் இருந்து 5 நிமிடங்கள்
இதன் மூலம் பணி நேரங்களில் மெட்ரோ ரயில்கள் வரும் இடைவெளி நேரம் 7 நிமிடங்களில் இருந்து 5 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவாகக் குறைக்கப்படும் என்பதால் ஐடி ஊழியர்களின் காத்திருப்பு நேரம் பாதியாகக் குறையும். இந்த 15 ரயில்களில் 2 ரயில்கள் எப்போதுமே அவசர காலத் தேவைகள், டெக்னிக்கல் கோளாறுகளை சமாளிப்பதற்காக ரிசர்வ் ஸ்டாக் எனப்படும் கூடுதல் ஸ்டாக்கில் வைக்கப்பட உள்ளன.
ஆனால், இந்த 15 ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் மட்டும் போதுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. காரணம், இந்த எல்லோ லைன் பாதையானது கிரீன் லைனுடன் ஆர்.வி.ரோடு ரயில் நிலையத்திலும், ப்ளூ லைனுடன் சென்ட்ரல் சில்க் போர்டு ரயில் நிலையத்திலும் இணைகிறது.
சென்ட்ரல் சில்க் போர்டு இண்டர்சேஞ்ச் ரயில் நிலையம்
எதிர்காலத்தில் சென்ட்ரல் சில்க் போர்டு இண்டர்சேஞ்ச் ரயில் நிலையம் வழியாக ப்ளூ லைன் சேவை தொடங்கி வைக்கப்பட்டால் மாரதஹள்ளி, பெல்லந்தூர், கே.ஆர்.புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களின் பயன்பாட்டால் 15 ரயில்களும் கடுமையான கூட்ட நெரிசலுடன் பயணிக்க வேண்டிய நிலை வரும்.
அதுவும் கடைசி மைல் தொலைவு வரை மினி பேருந்து அல்லது வேன் வசதிகளை ஏற்பாடு செய்தால் நிலைமை இன்னும் நெருக்கடியாகும் என்பதால், அதற்கு ஏற்ப தொலைநோக்குத் திட்டங்களுடன் மெட்ரோ நிர்வாகம் உள்கட்டமைப்பை படு ஸ்பீடாக தயார் செய்து வருகிறதாம்...!!!!
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications