பங்காரு அடிகளார் மறைவால்.. பட்டென கலங்கிய மோடி! நட்டாவிற்கு போன "மெசேஜ்".. உடனே ரூட்டை மாற்றும் பாஜக
சென்னை; ஆன்மீகப் புரட்சியாளர் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தற்போது முக்கியமான விவாதம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. இந்த இறங்களுக்கு பின் பாஜக முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்து உள்ளதாகவும் டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் இரண்டு நாட்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். 82 வயதாகும் பங்காரு அடிகளார் இரண்டு நாட்களுக்கு முன் மாலை மரணம் அடைந்தார். முக்கியமாக இதயவலி காரணமாக அவர் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். கடந்த வியாழன் அன்றும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது.
பங்காரு அடிகளார்: இதை தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடம் இயங்கி வருகிறது. இந்திய பீடத்தை நிறுவி குருவாக இருந்தவர் பங்காரு அடிகளார்.

ஆன்மீகத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்தவர் என்று அழைக்கப்பட்டவர் இவர். சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்தவர் பங்காரு அடிகளார்.ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தவர்.
பங்காரு அடிகளாரை பின்பற்றும் பக்தர்கள் 15 நாடுகளில் உள்ளனர். முக்கியமாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள் பலர் இவரை தீவிரமாக பின்பற்றி வந்தனர். பங்காரு அடிகளாரின் ஆன்மிக சேவையை பாராட்டி அவருக்கு 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது மத்திய அரசு
மோடி இரங்கல்; இந்த நிலையில்தான் ஆன்மீகப் புரட்சியாளர் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தற்போது முக்கியமான விவாதம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பிரதமர் மோடி வரை அடிகாளருக்கு தொடர்பு உண்டு. தமிழ்நாட்டில் பிராமணர் சமூகம் அல்லாத மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அதுவும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், கடவுளின் அவதாரமாக சித்தர்களின் வாழ்வியல் நெறியோடு பிரகாசித்திருக்கும் அடிகளார் மீது மோடிக்கும் ஒரு ஈர்ப்பு உண்டு.
( திடீர் மாரடைப்பு.. அதற்கு முன் நெஞ்சு வலி.. மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு நடந்தது என்ன? )
ஏனெனில், மோடியும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். இந்த நிலையில், அவரது மறைவுக்கு உள்ளார்ந்த தனது இரங்கலை தெரிவித்திருந்தார். இதற்கிடையே, பங்காரு அடிகளாருக்கு லட்சோப லட்ச பெண்கள் பக்தர்களாக இருப்பதால் அவர்களை அரசியல்படுத்தும் முகமாக அடிகளாரின் பின்தொடர்பாளர்களை பாஜகவிற்கு கொண்டு வரும் முயற்சியை எடுக்கலாம் என்று தேசிய தலைவர் நட்டாவுக்கு தமிழ்நாடு பாஜகவினர் தகவல் தெரிவித்திருக்கிறார்களாம்.

பெண்கள்: முன்னதாக இவருக்கு அஞ்சலி செலுத்த தமிழ்நாட்டின் பல பக்கங்களில் இருந்தும் மக்கள் வந்தனர். வடமாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இங்கே வந்தனர். பெண்கள் அதிக அளவில் இங்கே குவிந்தனர்.
சிவப்பு உடையில் பெண்கள் பலர் கும்பல் கும்பலாக இங்கே குவிந்தனர். அதேபோல் ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் மக்கள் இங்கே குவிந்தனர் . பெண்கள், மக்கள் பலரும் இங்கே கும்பல் கும்பலாக குவிந்தனர். இவர்களை பாஜக பக்கம் இழுக்க ரூட்டை பாஜக எடுத்து உள்ளதாம்.












Click it and Unblock the Notifications