சேரனின் சம்மட்டி அடி.. ECR-ல் விஜய் அதை பார்த்தாரா? தவெகவில் சீட் பிடிக்க லாரன்ஸின் ஹம்பக் விளம்பரம்
சென்னை: "ராகவா லாரன்ஸ் இப்போதைய ட்ரெண்டுக்கு தேர்தலில் நின்றால் எம்.எல்.ஏ ஆகலாம், ஆனால் விஜய் அவரை அமைச்சர் ஆக்குவாரா என்பதே பெரிய சந்தேகம்தான். இருந்தாலும், எப்படியாவது அமைச்சர் ஆகிவிடலாம் என்றொரு மனக்கணக்கோடுதான் அவர் டிவிகே-வை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறார். லாரன்ஸ் சினிமாவில் நிறைய பணம் சம்பாதித்துவிட்டார், அந்தப் பணத்தைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் அவர் அரசியலுக்கு வருகிறார் என்றொரு விமர்சனமும் மக்கள் மத்தியில் வைக்கப்படுகிறது" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து கூறியிருக்கிறார்.
MEDIA CIRCLE என்ற யூடியூப் சேனலுக்குப் பேட்டி தந்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, ராகவா லாரன்ஸின் அரசியல் வருகை மற்றும் அவர் மீதான சர்ச்சைகள் குறித்து பேசியதாவது:

"ராகவா லாரன்ஸ் தவெகவில் இணைந்து அரசியல் செய்ய வேண்டும் என்று லாரன்ஸ் தீவிரமாகத் திட்டமிடுகிறார். தற்போதைய சூழலில் காலியாக இருக்கக்கூடிய திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடலாம் என்பதுதான் அவருடைய முக்கியக் கணக்காக இருக்கிறது.
லாரன்ஸ் - கிறிஸ்தவ பெயர்
லாரன்ஸ் என்பது ஒரு கிறிஸ்தவப் பெயர் என்பதால், கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய திருச்சி கிழக்குத் தொகுதி தனக்குக் கிடைத்தால் மிக எளிதாக வென்று எம்.எல்.ஏ ஆகிவிடலாம் என்று அவர் ஒரு கணக்குப் போடுகிறார்.
அதுமட்டுமில்லாமல், சமூக வலைத்தளங்களில் வரும் மீம்ஸ்களில் "ராகவா லாரன்ஸ் துணை முதல்வர்" என்று போர்டு போடுவதைப் போல, அவருக்கும் உள்ளுக்குள் சில பெரிய ஆசைகளும், கலர் கனவுகளும் ஓட ஆரம்பித்துள்ளன. ஆனால், விஜய் அவர்கள் லாரன்ஸை எந்தக் காலத்திலும் துணை முதல்வர் ஆக்க மாட்டார்.
இப்போதைய ட்ரெண்டுக்கு அவர் தேர்தலில் நின்றால் எம்.எல்.ஏ ஆகலாம், ஆனால் விஜய் அவரை அமைச்சர் ஆக்குவாரா என்பதே பெரிய சந்தேகம்தான். இருந்தாலும், எப்படியாவது அமைச்சர் ஆகிவிடலாம் என்றொரு மனக்கணக்கோடுதான் அவர் டிவிகே-வை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறார். லாரன்ஸ் சினிமாவில் நிறைய பணம் சம்பாதித்துவிட்டார், அந்தப் பணத்தைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் அவர் அரசியலுக்கு வருகிறார் என்றொரு விமர்சனமும் மக்கள் மத்தியில் வைக்கப்படுகிறது.
விளம்பர வீடியோக்கள்
ஆனால், அவர் இயல்பாகவே உதவி மனப்பான்மை கொண்டவர் என்பதைப் புரிய வைக்கத்தான் அவருடைய கடந்த காலத்தைப் பற்றி நாம் இவ்வளவு விரிவாகப் பேச வேண்டியிருக்கிறது.
லாரன்ஸ் அரசியலுக்கு வந்தால் பல நல்ல விஷயங்களைச் செய்வார் என்பது மக்களுக்கே தெரியும். அப்படி இருக்கும்போது, "நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன்" என்று வீடியோ போட்டுத் தன்னைத் தானே விளம்பரப்படுத்திக்கொண்டு அரசியலுக்கு வர வேண்டிய அவசியமில்லை.
மக்கள் சேவை செய்ய நினைக்கிற ஒருத்தருக்கு இந்த விளம்பரம் எதற்கு? சேவைக்கு மறுஉருவமாக வாழ்ந்த அன்னை தெரசா போன்றவர்கள் தங்களது உதவிகளை எந்தக் காலத்திலும் விளம்பரப்படுத்திக்கொண்டதே இல்லை. சினிமா துறையிலேயே கூட யாருக்கும் தெரியாமல் எத்தனையோ உதவிகளைச் செய்யக்கூடிய நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஈசிஆர் ரோட்டில் போஸ்டர்கள்
2 நாட்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு நான் ஈ.சி.ஆர் சாலை வழியாகச் சென்றபோது, அங்கு லாரன்ஸின் பெரிய பெரிய உருவப் படங்கள் போடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், "லாரன்ஸ் அவர்களே நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும்" என்று பொதுமக்கள் கோரிக்கை வைப்பது போல அச்சிடப்பட்டிருந்தது.
பொதுமக்கள் யாரும் லாரன்ஸ் அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் ஒட்ட மாட்டார்கள். இவை அனைத்தும் மக்களை முட்டாளாக்க நினைக்கக்கூடிய வெற்று விளம்பரங்கள்.. லாரன்ஸ் தனது சொந்தக் காசை கொடுத்துதான் இந்த போஸ்டர்களை எல்லா இடங்களிலும் ஒட்ட வைத்துள்ளார். இ.சி.ஆர் சாலையில் இந்த போஸ்டர்கள் அடுத்தடுத்து ஒட்டப்பட்டிருப்பதற்குக் காரணம், அந்த வழியாகச் செல்லக்கூடிய நடிகர் விஜய் அவர்களின் கண்ணில் இது பட வேண்டும் என்பதற்காகத்தான்.
விஜய் தன்னைக் கூப்பிட்டு அரசியல் வாய்ப்புத் தர வேண்டும் என்ற கணக்கில்தான் லாரன்ஸ் இப்படிச் செய்கிறாரோ என்று நமக்குத் தோன்றுகிறது. ஒரு நல்ல மனிதருக்குத் தன்னை நிரூபிக்க இதுபோன்ற தற்போதைய தேவையற்ற விளம்பரங்கள் தேவையே இல்லை.
அரசியல் வருகை பரபரப்பு
தான் அரசியலுக்கு வருவதை ஒரு பரபரப்பான விஷயமாகவும் மாற்றப் பார்க்கிறார். அரசியல் முடிவை அறிவிப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய சாதனையான விஷயம் கிடையாது.. அரசியலுக்கு வருவதாக இருந்தால் ஒரு நாள் காலையில் எழுந்து செய்தியாளர்களைக் கூப்பிட்டு "நான் அரசியலுக்கு வருகிறேன், சுயேச்சையாக நிற்கிறேன்" என்று அறிவிக்க வேண்டியதுதானே? அதை விடுத்து ஏன் இவ்வளவு பரபரப்பு செய்ய வேண்டும்?
லாரன்ஸ் சுயேச்சையாக நிற்கத் துணியாமல், ஒருபுறம் தவெக கட்சியிலும், மற்றொரு புறம் அண்ணாமலையின் கட்சியிலும் அரசியல் வாய்ப்புக்காகத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் என்ற பேச்சுக்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
சேரன், பிரவீன் காந்த்
உங்களுக்கு நல்ல எண்ணம் இருந்தால் இந்த வால் போஸ்டரோ, பப்ளிசிட்டியோ தேவையே இல்லை. அதிபுத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்து, விமர்சனம் செய்பவர்களை 'தெருநாய்'களோடு லாரன்ஸ் ஒப்பிட்டுப் பேசியதால் சினிமா துறையினர் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் பிரவீன் காந்த் மற்றும் இயக்குநர் சேரன் உள்ளிட்ட பல முக்கிய சினிமா பிரபலங்கள் லாரன்ஸைக் கடுமையாகச் சாடத் தொடங்கிவிட்டனர். 'என்ன, நம்மளையெல்லாம் தெருநாய் என்று சொல்கிறாரா?' என்று மக்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.
சேரன் போட்ட போடு
லாரன்ஸின் இந்த கருத்திற்கு இயக்குநர் சேரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். அதில், லாரன்ஸின் மனிதாபிமானத்தையே சந்தேகிக்க வேண்டியுள்ளது என்றும், 'உங்களிடம் பிஸ்கட்டோ அல்லது பிரியாணியோ எதிர்பார்க்காத ஒரு நபர் நான்' என்றும் குறிப்பிட்டு லாரன்ஸின் முகத்திரையைக் கிழிப்பது போல ட்வீட் செய்துள்ளார்.
ஒரு நல்ல மனிதர் அரசியலுக்கு வர நினைத்தால் அமைதியாக, மௌனமாகத் தன் காரியங்களைச் செய்ய வேண்டும். அதை விடுத்து பொதுவெளியில் அதிகம் பேசிக்கொண்டே இருந்தால், அது விபரீதத்தில்தான் முடியும். லாரன்ஸும் அப்படித்தான் புத்திசாலித்தனமாகப் பேசுகிறேன் என்று நினைத்து, மக்களைத் தெருநாயோடு ஒப்பிட்டுப் பேசி இன்று எல்லாரிடமும் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார். அவர் அரசியலுக்கு வருவதால் இனிவரும் காலங்களில் தனது சொல்லாடல்களில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்."
-
நீங்க நல்லா இருக்கோனும்..பார்ட்டி ஃபண்டை கட் செய்த விஜய்! குஷியில் வீடுகட்டுவோர்..ராடாரில் ஆபீசர்ஸ் -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
துரை வைகோ பேசினது இதுக்குதானா.. டெல்லியில் வைகோவுக்கு சிறப்பு பதவி! கிரீன் சிக்னல் கொடுத்த விஜய்! -
எந்தவித ஊழல் மற்றும் கமிஷன் குற்றச்சாட்டு இல்லை... முதல்வர் விஜய்யை பாராட்டிய வைகோ -
திமுகவில் ரூ.25 லட்சம் வரை லஞ்சம்.. விஜய் ஒரு பைசா வாங்கவில்லை! பூரித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு -
விஜய் உடன் Cognizant அதிகாரிகள் திடீர் சந்திப்பு.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன? -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல் -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்!











Click it and Unblock the Notifications