கதறல் கேட்குதா சிஎம்? வாயை திறங்க சிஎம்.. கறுப்பு பேட்ஜ், பதாகைகளுடன் வந்த திமுக எம்எல்ஏக்கள்!
சென்னை: தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடியுள்ளது. சட்டசபைக்கு இன்று வந்த திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். மேலும் தவெக ஆட்சியை விமர்சிக்கும் விதமாக பதகாகைகளை ஏந்தி வந்தனர். அந்த பதாகைகளில் "திரையில் நாயகன், தரையில் வில்லன், கதறல் கேட்குதா சிஎம், ரீல்ஸ் இங்கே ரியல் எங்கே" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வந்தனர். மேலும் சட்டசபை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பதவியேற்ற பிறகு சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று துவங்குகிறது. காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. தவெக அரசின் முதல் கூட்டம் என்பதால் இந்த கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தொடரும் மின் வெட்டு சம்பவங்கள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பெண்களுக்கு பாதுகாப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், இந்தக் கூட்டத்தொடர் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று சட்டசபைக்கு வந்த திமுக எம்பிக்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.
அதேபோல, தவெக ஆட்சியை விமர்சிக்கும் விதமாக பதகாகைகளை ஏந்தி வந்தனர். அந்த பதாகைகளில் "திரையில் நாயகன், தரையில் வில்லன், கதறல் கேட்குதா சிஎம், ரீல்ஸ் இங்கே ரியல் எங்கே, தூயசக்தி இல்லை துயரசக்தி, திரையில் ஹீரோ தரையில் ஜீரோ" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வந்தனர்.
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு எங்கே போச்சு என்று கோஷமும் எழுப்பி தங்கள் எதிர்ப்பை திமுக எம்.எல்.ஏக்கள் பதிவு செய்தனர். தமிழக முதல்வரே வாயை திறங்க.. கேட்கலயா கேட்கலயா கதறல் சத்தம் கேட்கலயா" என்று கோஷமும் எழுப்பினர்.
-
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்".. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications