Hormuz-ல் அடுத்தடுத்து 2 முக்கிய விஷயம் நடக்கபோகுது.. இது வேறலெவல் சம்பவமாச்சே.. குஷியோ குஷி!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து ஞாயிற்றுக்கிழமையே அறிவிப்பு வெளியானாலும், இரு நாடுகளும் ஒப்பந்த விதிமுறைகளை ஆய்வு செய்து கையெழுத்திட 4 நாட்கள் ஆகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் இணையம் வாயிலாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வரும் என்று இரு நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.
இதனால் ஹார்முஸ் நீரணையில் இரண்டு முக்கிய விஷயங்கள் நடக்கபோகுது, இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் கொண்டாடட்டத்தில் உள்ளது. அப்படி என்ன நடக்க போகுது?

வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்து
அமெரிக்காவும் ஈரானும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மத்தியஸ்தத்தில் உருவாக்கப்பட்ட 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்' மின்னணு முறையில் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் அதிபர்களும் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகையும், ஈரான் வெளியுறவு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதும், 60 நாட்கள் பேச்சுவார்த்தைக்கான காலம் துவங்குகிறது. இதற்கான அணிகள் இரு நாட்டில் இருந்தும் நாளை ஜெனிவா-விற்கு செல்ல உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை துவங்கும் நிலையில் ஈரான் உடனடியாக ஹார்முஸ் நீரிணையை திறந்துவிடும் என்றும், அமெரிக்கா உடனடியாக கடற்படை முற்றுகையை நீக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ஈரான் உடனடியாக ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்துவிடும் என்று உறுதியளித்துள்ளது. உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமாக இருக்கும் இந்த நீரிணை திறக்கப்படுவது, உலக எண்ணெய் சந்தையில் பெரிய நிம்மதியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே ஒரு பேரல் 80 டாலருக்கு கீழ் குறைந்திருக்கும் வேளையில், ஹார்மூஸ் முழுமையாக திறக்கப்படுவது மூலம் 65-70 டாலர் என்ற பழைய நிலைக்கு விரைவில் வரலாம்.
அதேபோல், அமெரிக்காவும் ஈரான் மீது விதித்த கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த இரு நடவடிக்கைகளும் ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரான் கப்பல் போக்குவரத்திற்கு பச்சை கொடி காட்டியுள்ள அமெரிக்க கடற்படை இன்று அல்லது நாளை ஹார்முஸ்-ஐ காலி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஈரான் ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களிடம் கட்டணத்தை வசூலிக்குமா அல்லது இறுதி ஒப்பந்தம் முடியும் வரையில் காத்திருக்குமா என்பது அடித்த முக்கியமான கேள்வியாக உள்ளது.
ஷெபாஸ் ஷெரீப் டிவீட்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்காவும் ஈரானும் இடையேயான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்' மின்னணு முறையில் கையெழுத்தானதாக அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் தான் மத்தியஸ்தராக ஆதரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் டிரம்பின் பேச்சுவார்த்தை முயற்சிகளை பாராட்டிய ஷெரீப், இந்த ஒப்பந்தம் வளைகுடா பகுதியில் பிராந்தியத்தில் பெரும் அழிவைத் தடுக்க உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
300 பில்லியன் டாலர் மறுசீரமைப்பு நிதி
இந்த ஒப்பந்தத்தின்படி, ஈரானின் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக 300 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி திரட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை ஈரானின் அண்டை நாடுகள் பங்களிப்பு செய்யும் என்றும், இது ஈரானின் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் பேச்சுவார்த்தை
இந்த ஒப்பந்தம் மின்னணு முறையில் கையெழுத்தானதால், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் எந்தவிதமான இறுதி போர் நிறுத்த ஒப்பந்த கையெழுத்து நடைபெறாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இரு நாடுகளின் பேச்சுவார்த்தை குழுக்கள் வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் கூடி, ஈரானின் அணு திட்டம் தொடர்பான இறுதி ஒப்பந்தம் குறித்து விரிவாக ஆலோசிக்கவுள்ளன.
இந்த 60 நாட்கள் பேச்சுவார்த்தை காலம் கடினமான கெடுவாக கருதப்படாது என்றும், தேவைப்பட்டால் இந்த காலக்கெடுவை நீட்டிக்கலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் எச்சரிக்கை
இந்த ஒப்பந்தத்தை ஈரான் முழுமையாக கடைப்பிடிக்காவிட்டால், ஈரானை "குண்டு வீசி அழிப்போம்" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், மத்திய கிழக்கு பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் பதற்றம் குறைய வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
ஈரானிடம் அணு ஆயுதத்தை விட மோசமான புதிய ஆயுதம்.. அமெரிக்க உளவுத்துறை வார்னிங்! -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
ராஜா மாதிரி மீண்டும் தலையெடுக்கும் ஈரான்.. ஹார்மூஸ் வழியாக 3 ஈரானிய கப்பல் 'அவுட்'! -
இஸ்ரேல் தேரை இழுத்து தெருவில் விட்டது.. லெபனான் மீது 84 முறை தாக்குதல்.. ஈரான் உச்சக்கட்ட கோபம்! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
பயிர் கடன் ரூ.75000 தள்ளுபடி விடுங்க! இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. மொத்த விவசாய துறையும் ஹேப்பி! -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்!












Click it and Unblock the Notifications