குதிரைபேர விவகாரம்.. செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு முன் ஜாமீன்! போலீஸ் வாதத்தை கேட்காத நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு, சதித்திட்டம் தீட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜாவிடம் ரூ.35 கோடி தருவதாக பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளையராஜா புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

Senthil Balaji s anticipatory bail plea to be heard in the afternoon Senior Govt Counsel appearing

அவர்கள் நடத்திய விசாரணைக்கு பின்னர் இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக, ஐ.பி.டி.எஸ். என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள், தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமாரும் கூறிய அறிவுரையின்பேரில்தான் த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.35 கோடி பேரத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் தந்ததாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில், செந்தில்பாலாஜியையும், அவரது சகோதரர் அசோக்குமாரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பினார்கள். அந்த சம்மனில், ஜூலை 6-ந்தேதி ஆஜராகவேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் ஆஜராகவில்லை.. தற்போது தலைமறைவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் அசோக்​கு​மார் முன்ஜாமீன் கோரி, ஏற்​கெனவே உயர்நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்திருந்தார்.

அதனை தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் செந்​தில் பாலாஜிக்​கும் முன்​ஜாமீன் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்ளார். அந்த மனுவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.. இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் கூட என்னுடைய பெயர் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.. இந்த வழக்கில் போலீசார் என்னைக் கைது செய்யக்கூடும் என்பதால், எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. இன்று காலை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் ஆஜரானார்."கரூர் இடைத்தேர்தலில் பணியாற்றுவதை தடுக்கவே திட்டமிட்டு வழக்குப்பதிவு. யாருக்கும் எந்தவொரு பணமும் வழங்கப்படவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளோம் என செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. இதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்ற செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமாருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+