தனியாக நடந்து வந்த எடப்பாடி.. நான் எதுக்கும் பொறுப்பில்ல.. கைக்கு போன "கடிதம்".. அதிமுகவில் அலப்பறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி மீது கோபத்தில் உள்ளனர். எங்கள் மாவட்டங்களில் சம்பந்தமே இல்லாதவர்களை வேட்பாளர்களாக போடுகிறார்கள். அப்படி போட்டால் தேர்தலில் யார் வேலை பார்ப்பார்கள். அதனால்தான் இப்போது யாரும் வேலை பார்க்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார், என்று அதிமுக முன்னாள் நிர்வாகி நாஞ்சில் கோலப்பன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின் மீண்டும் உட்கட்சி மோதல் வெடிப்பதற்கான அறிகுறிகள் ஏற்பட தொடங்கி உள்ளன. அதிமுகவில் செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்படலாம் என்றும் செய்திகள் வருகின்றன. அந்த கட்சியில் லோக்சபா தேர்தல் முடிந்து என்ன நடக்கும் என்று அதிமுக முன்னாள் நிர்வாகி நாஞ்சில் கோலப்பன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Edappadi Palanisamy will face the heat after June 4 as rift in AIADMK grows day by day

பேட்டி: அதில், அதிமுக உடையும் என்று திமுக அமைச்சர் கூறுகிறார். அதிமுக மீதான பாசத்தில் இப்படி கூறுகிறார்கள். அதிமுக சீரழிந்து போய்விட்டது. பெரிய தலைவர்கள் இருந்த கட்சி சீரழிந்துவிட்டது. மோசமாகிவிட்டது. எப்படி எல்லாம் இந்த கட்சி இருந்தது என்று நினைத்து அப்படி திமுக அமைச்சர்களே பேசும் நிலை ஏற்பட்டு உள்ளது . ஜூன் 4ம் தேதிக்கு பின் கட்சியின் உண்மையான நிலை தெரியும். கட்சி எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று தெரியும்.

செங்கோட்டையன் நினைத்து இருந்தால் அதிமுகவை அப்போதே கைப்பற்றி இருக்கலாம். அவர் நினைத்து இருந்தால் அப்போதே கட்சியை தனக்கு கீழ் கொண்டு வந்து இருக்கலாம். ஏன் வேண்டாம், எதுக்கு வேண்டும் என்று அப்போது நினைத்தார் என்று தெரியவில்லை. அவர் இப்போது வருகிறார். மீண்டும் வருகிறார். ஜூன் 4க்கு பின் களமிறங்கலாம். எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் எடுக்கலாம் என்று அவர் நினைக்கிறார். ஜெயலலிதா காலத்தில் இருந்தே இருந்த தலைவர் அவர்.

நல்ல முடிவு எடுப்பார்; ஜூன் 4 க்கு பின் நல்ல முடிவு எடுக்க அவர் வெளியே வருவார். அதிமுகவில் சமுதாய ரீதியான மோதல்கள் எல்லாம் அப்போது இல்லை. இப்போதும் இல்லை. எடப்பாடி இருக்கும் வார்டிலேயே 2019ல் அதிமுக தோல்வி அடைந்தது. ஜாதி வாக்குகள் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்கவில்லை. 9 தோல்வி எடப்பாடி தற்போது 10 தோல்வி எடப்பாடி ஆக போகிறார்கள். இப்போது தொண்டர்கள் தொடங்கி கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் வரை எல்லாரும் அப்செட் ஆகி உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி மீது கோபத்தில் உள்ளனர். எங்கள் மாவட்டங்களில் சம்பந்தமே இல்லாதவர்களை வேட்பாளர்களாக போடுகிறார்கள். அப்படி போட்டால் தேர்தலில் யார் வேலை பார்ப்பார்கள். அதனால்தான் இப்போது யாரும் வேலை பார்க்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். சிவி சண்முகம் எடப்பாடிக்கு லெட்டர் கூட எழுதினார். என்னுடைய பரிசீலனை இல்லாமல் வேட்பாளரை போட்டீங்க. அவரின் வெற்றி தோல்விக்கு நான் பொறுப்பல்ல என்றார். இப்போது நேற்று எடப்பாடி கோர்ட்டுக்கு ஆஜராக சென்றார்.,

அவரை அழைத்து செல்ல எத்தனை தொண்டர்கள், மாவட்ட செயலார்கள் வந்தனர். தனியாக எடப்பாடி வந்தார். ஜெயலலிதாவிற்கு இப்படி எல்லாம் நடக்குமா? சொல்லுங்கள். தனியாக எடப்பாடியை அழைக்க கூட ஆட்கள் இல்லாத அளவிற்கு வந்தார். அதுதான் இப்போது எடப்பாடிக்கு இருக்கும் நிலைமை, என்று அதிமுக முன்னாள் நிர்வாகி நாஞ்சில் கோலப்பன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+