என்னோட ராசி நல்ல ராசி.. 2வது முறையாக வென்றார் எடப்பாடி பழனிச்சாமி!
Recommended Video

சென்னை: இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணா தீர்ப்பு வழங்கினார்.
அதில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பளித்துள்ளார். இதன் மூலம் இரண்டாவது முறையாக ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தக்க வைத்துக் கொண்டார்.

சசிகலா
கடந்த 2017-ஆம் ஆண்டு சசிகலா முதல்வராக பதவியேற்க இருந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர் எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்துவிட்டு சென்றார்.

தர்மயுத்தம்
இதையடுத்து அவரும் முதல்வராக பதவியேற்றார். எனினும் அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். இதனிடையே முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸும் தர்மயுத்தத்தை நடத்தி வந்தார்.

கவிழும்
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக அரசு அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இந்நிலையில் தகுதி நீக்க வழக்கில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வந்தால் அதிமுக அரசு கவிழும் என எதிர்பார்க்கப்பட்டது.

நிரந்தரம் இல்லை
ஆனால் தீர்ப்போ அதிமுக அரசுக்கு சாதகமாக இருந்தது. இதனால் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. எனினும் இது நிரந்தரம் இல்லை.

இழக்கும்
மொத்தம் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தினால் அதில் அதிமுகவுக்கு பெருவாரியான இடங்கள் கிடைக்காவிட்டால், அதாவது குறைந்தது 10 இடங்களிலாவது வெற்றிக் கொள்ளாமல் போய்விட்டால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழக்கும்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications