பிப்ரவரி 4ல் நடக்கும் மெகா சம்பவம்.. தேதி குறித்த எடப்பாடி பழனிசாமி.. சென்னையில் திரளும் அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், பிப்ரவரி 4ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தை காப்போம், மக்களை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதேபோல் அதிமுகவில் விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு, நேர்காணலையும் நடத்தி முடித்துவிட்டார்.

Edappadi Palaniswami

இன்னொரு பக்கம் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடுக்கான பேச்சுவார்த்தை நிறைவு அடைய உள்ளது. அதுமட்டுமல்லாமல் என்டிஏ கூட்டணி சார்பாக முதல் பொதுக்கூட்டமும் நடத்த முடிக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரனின் அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில், ஓபிஎஸ்ஸை மட்டும் ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார்.

இந்த நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பிப்ரவரி 4ஆம் தேதி நடக்கவுள்ளது. இதுதொடர்பாக அதிமுக சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், பிப்ரவரி 4ஆம் தேதி புதன் கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் எந்தத் தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கப்படலாம் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தை காப்போம், மக்களை மீட்போம் சுற்றுப்பயணத்தின் போதே எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்கள் தேர்வை முடித்துவிட்டார். இதனால் அடுத்தடுத்து தேர்தல் பணிகளை மேற்கொள்வது, பொதுக்கூட்டங்களை நடத்துவது உள்ளிட்டவை தொடர்பாகவும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+