கனிமொழி கைதான போது கூட ஸ்டாலின் பதறவில்லை! செந்தில் பாலாஜிக்காக ஏன்? - எடப்பாடி பதிலடி வீடியோ
சென்னை: தனது தங்கை கனிமொழி கைது செய்யப்பட்ட போது கூட பதறாத ஸ்டாலின், செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் ஏன் பதறுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஒரு காணொலியை வெளியிட்டிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பதிலுக்கு இன்றொரு காணொலியை வெளியிட்டுள்ளார். அதில் அதிமுக யாருக்கும் அடிமையில்லை என பாஜகவுக்கும் சூசகமாக ஒரு மெசேஜ் ஒன்றை கூறியிருக்கிறார்.

எதுவுமே தெரியாத ஒரு முதலமைச்சர் தமிழகத்தை ஆள்வதாகவும் ஸ்டாலினை பொம்மை முதலமைச்சர் எனவும் விமர்சித்துள்ள எடப்பாடி, செந்தில்பாலாஜி எங்கே தனது குடும்பத்தினரை பற்றி அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சொல்லிவிடுவாரோ என்ற பதற்றத்தில் தான் முதல்வர் அவரை பார்க்கச் சென்றதாக கூறியிருக்கிறார்.
ஆ.ராசா, கனிமொழி போன்றோர் கைது செய்யப்பட்ட போது திமுக இப்படி ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என்றும் சொந்த சகோதரியை கூட திகார் சிறையில் சென்று பார்க்காதவர் ஸ்டாலின் எனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். இந்நிலையில் செந்தில்பாலாஜி கைது என கேள்விபட்டவுடன் ஸ்டாலினிடம் இவ்வளவு பதற்றம் ஏன் என்ற கேள்வியை தனது வீடியோவில் எழுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
டாஸ்மாக் பார்கள் சட்டவிரோதமாக நடந்து வருவதாக குற்றஞ்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம் எந்த வளர்ச்சியும் அடையவில்லை என்றும் ஊழலில் மட்டுமே வளர்ச்சி நடந்துள்ளது எனவும் விமர்சித்திருக்கிறார். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மீது குற்றஞ்சுமத்த வேண்டும் என்றால் முதலில் முழுமையான தகவல்களோடு குற்றஞ்சுமத்த வேண்டும் என ஸ்டாலினை அவர் கேட்டுக்கொண்டார்.
போகிற போக்கில் தனது வீடியோ பதிவின் மூலம் பாஜகவுக்கும் ஒரு மெசேஜை கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதாவது, அதிமுக யாருக்கும் அடிமையில்லை எனவும் அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போவார்கள் என்றும் காற்றோடு காற்றாக கலந்து போவார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.
-
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications