தமிழ்நாட்டின் கடன் அவ்ளோ இருக்கு.. மகளிருக்கு ரூ.2,000 எப்படி கொடுக்க முடியும்? சமாளித்த எடப்பாடி!
சென்னை: நிர்வாகத் திறமை இருந்தால், அனைத்தையும் சமாளிக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக இருக்கும் சூழலில், மகளிர் உரிமைத் தொகை உயர்த்துவது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு, கடன் சுமையை கையாள திமுக அரசுக்கு திறமை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி அதிமுக ஆட்சிக்கு வந்தால், குலவிளக்கு திட்டம் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் அளிக்கப்படும்.

இது குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விடியல் பயணத் திட்டத்தை ஆண்களுக்கும் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். புதிய திட்டங்கள் எதுவும் இல்லாமல், திமுகவின் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு அதிமுகவினர் மத்தியிலும் பெரியளவில் ரசிக்கப்படவில்லை.
அதேபோல் தமிழ்நாட்டின் கடன் அதிகரித்துக் கொண்டே செல்வதாக விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி, மகளிர் உரிமைத் தொகை உயர்வு மற்றும் விடியல் பயணம் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்திருப்பது தமிழ்நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் என்று விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை எழுப்பிய கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி, நிர்வாகத் திறமை இருந்தால், அனைத்தையும் சமாளிக்க முடியும். தமிழ்நாட்டின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக இருக்கும் சூழலில், மகளிர் உரிமைத் தொகை உயர்த்துவது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு, கடன் சுமையை கையாள திமுக அரசுக்கு திறமை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications