எடப்பாடியின் அடுத்த ஆக்சன்.. அண்ணாமலையை திட்டி பாஜகவில் விலகிய நிர்மலுக்கு அதிமுகவில் முக்கிய பதவி
சென்னை: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்த நிலையில், பாஜகவில் இருந்து அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி விலகிய சிடி நிர்மல் குமாருக்கு முக்கிய பதவியை வழங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு புதிய நிர்வாகிகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், "கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு கோவை மண்டலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் திரு. S.T. தர்மேஷ்குமார் அவர்களும், செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. சிங்கை G. ராமச்சந்திரன் அவர்களும்,

கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மண்டலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் திரு. N. ராஜராஜசோழன் அவர்களும், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மதுரை மண்டல துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் திரு. D. கௌரிசங்கர் அவர்களும், செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. V.V.R. ராஜ் சத்யன் அவர்களும்,
கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை மண்டலச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. M. கோவை சத்யன் அவர்களும், இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. T. பிரசாத் அவர்களும், சென்னை புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திருமதி இந்திராணி சுடலைமுத்து அவர்களும், இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று நியமிக்கப்படுகிறார்கள்.
தலைவர்: திரு. சிங்கை G. ராமச்சந்திரன், B.E., MBA., அவர்கள், (பாலாஜி நகர், வரதராஜபுரம், கோவை)
துணைத் தலைவர்கள்: திரு. N. ராஜராஜசோழன், M.A., B.L., அவர்கள் (தெற்கு அக்ரஹாரம், வலங்கைமான் அஞ்சல், திருவாரூர் மாவட்டம்)
திரு. D. கெளரிசங்கர், Dip., அவர்கள் (நாவினிப்பட்டி அஞ்சல், மேலூர், செயலாளர் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் )
திரு. V.V.R. ராஜ் சத்யன், MBA., அவர்கள் (பழைய விளாச்சேரி சாலை, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம்)
இணைச் செயலாளர்கள்: திரு. M. கோவை சத்யன், PGDM., அவர்கள் (தியாகராயநகர், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்)
திரு. C.T.R.நிர்மல்குமார், B.E., LLB., M.A.. அவர்கள் (உசிலம்பட்டி, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் )
துணைச் செயலாளர்கள்: திரு. T.பிரசாத், MBA., அவர்கள் (ஆர்.கே. சாலை, மயிலாப்பூர், தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம் )
திருமதி இந்திராணி சுடலைமுத்து, M.Sc., B.L., அவர்கள் (விக்னராஜபுரம், வேங்கைவாசல், சென்னை புறநகர் மாவட்டம்)
பொருளாளர்: திரு. S.T. தர்மேஷ்குமார், B.Com., M.Sc., அவர்கள் (ஆற்காடு குப்பம் கிராமம், திருத்தணி, திருவள்ளூர் மேற்கு மாவட்டம்)
கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதில் இணைச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு உள்ள சிடி நிர்மல் குமார் பாஜக ஐடி விங் மாநில செயலாளராக பதவி வகித்தவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து பாஜக ஐடி விங்கில் உள்ள பல்வேறு நிர்வாகிகள் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.












Click it and Unblock the Notifications