நான் சொல்வதை ஜோக் என்கிறார்கள்.. எடப்பாடி பிரதமராக வாய்ப்பு இருக்கு.. ராஜேந்திர பாலாஜி சொன்ன லாஜிக்
சென்னை: எடப்பாடி பழனிசாமியே பிரதமராக வர வேண்டும். நான் இதை சொன்னவுடன் சில பேர் நக்கல், ஜோக் என்று சொல்கிறார்கள் எனவும் 10 எம்பிக்களை வைத்திருந்தவர்கள், ஒரு எம்பியை வைத்தவர்கள் கூட பிரதமராக வந்திருக்கிறார்கள் என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
எப்போதும் பரபரப்பாக பேசக்கூடியவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. வழக்குகளில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் காரணமாக அதிகம் வாய் திறக்காமல் மவுனம் காத்து வந்த ராஜேந்திர பாலாஜி தற்போது நீதிமன்றம் நிபந்தனைகளை தளர்த்திவிட்டதால் பழையபடி பரபரப்பாக பேச ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் நேற்று முன் தினம் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிசாமியே கூட இந்திய பிரதமராக வர வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

மேலும் அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவை என 40க்கு 40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றும், யார் பிரதமர் என்பதை எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யும் வகையில் பெரும் வெற்றியை கொடுக்க வேண்டும். சூழ்நிலை வந்தால் எடப்பாடி பழனிசாமியே கூட இந்திய பிரதமராக வர வாய்ப்பு உள்ளது என பேசினார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், எடப்பாடி பழனிசாமி பிரதமராக வரும் சூழல் உள்ளது என ராஜேந்திர பாலாஜி கூறியதற்கு சிரிப்புதான் என் பதில்.
ஜோக் என்று சொல்கிறார்கள்: பிரதமர் பதவிக்கு என மரியாதை உள்ளது. மூன்றாவது முறையாக மோடிதான் பிரதமர் வேட்பாளர். எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் கனவு இருக்கலாம்" என்று கூறியிருந்தார். அதேபோல், அமைச்சர் ரகுபதியும் ராஜேந்திர பாலாஜியின் கருத்து பற்றி பேசுகையில், ராஜேந்திர பாலாஜி எப்போதும் நகைச்சுவையாக பேசுபவர். அப்படிதான் பேசியிருக்கிறார், எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்தியை சொல்லியிருக்கிறார், சிரிப்புதான் வருகிறது" என்றார்.
இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி தனது கருத்தை எல்லோரும் ஜோக் அடிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி பிரதமராக எப்படி வாய்ப்பு உள்ளது என்றும் பேசியிருக்கிறார். இது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:- எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூட்டணியில் விரல் காட்டுபவர்கள் பிரதமராக வர வேண்டும். அல்லது எடப்பாடி பழனிசாமியே பிரதமராக வர வேண்டும். நான் இதை சொன்னவுடன் சில பேர் நக்கல், ஜோக் என்று சொல்கிறார்கள்..
3-வது பெரிய கட்சி: கர்நாடகாவின் தேவேகவுடா பிரதமராக வரவில்லையா?, 10 எம்பிக்களை வைத்திருந்தவர்கள், ஒரு எம்பியை வைத்தவர்கள் கூட பிரதமராக வந்திருக்கிறார்கள். ஒரு எம்பியை வைத்திருக்கிறவர்கள் கூட பிரதமராக வரும்போது, 2 கோடி உறுப்பினர்களை வைத்திருக்கின்ற அதிமுக பொதுச்செயலாளர் ஏன் வர முடியாது. இந்தியாவிலேயே 3-வது பெரிய கட்சியாக, நாடாளுமன்றத்தில் உக்கார வைத்தார் ஜெயலலிதா. மிகப்பெரிய கட்சியாக அங்கீகரித்தார்கள்.
அப்படிப்பட்ட கட்சி, இயக்கம் வீழ்ந்துவிடுமா?.. வீழ்ந்துவிடும் என்று கனவு காண்பவர்கள்.. பகல் கனவு காணாதீர்கள். அதிமுக புது உத்வேகத்தோடு, புது எழுச்சியோடு மீண்டும் எழுந்து வரும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம்.., அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக வெல்லும்.. அதிமுகவுக்கு வாக்களியுங்கள்.. உங்களுக்காக பணியாற்ற நாங்கள் இருக்கிறோம். இவ்வாறு ராஜேந்திர பாலாஜி பேசினார்.
-
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications