தவெக-வில் செஞ்சி ராமச்சந்திரன் இணைவது உண்மையா? எடப்பாடி பழனிசாமி கூறிய தகவல்!
சென்னை: அதிமுக மூத்த தலைவர் செஞ்சி ராமச்சந்திரன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தியை கிளப்புகிறார்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட கட்சியாக அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், முதல் மாநில மாநாட்டுக்குத் தமிழக காவல்துறையும் அனுமதி கொடுத்துள்ளது. இதனால், த.வெ.க தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான வேலைகள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், தவெக கட்சியில் சேருமாறு, அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரனை விஜய் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அணுகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் செஞ்சி ராமச்சந்திரனுக்கு தற்போது போதிய முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதால், விஜய் கட்சியின் கோரிக்கையை ஏற்று அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் எனக் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தில் செஞ்சி ராமச்சந்திரன் இணைந்தால் அவருக்குக் கட்சியின் அவைத் தலைவர் பதவி கொடுக்க விஜய் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி இதுகுறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், "அதிமுக ஒரு வலிமையான இயக்கம். 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த இயக்கம். பொன்விழாக் கண்ட இயக்கம் அதிமுக. அதனால், வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தியை கிளப்புகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications