2024 நாடாளுமன்றத் தேர்தல்! அதிமுகவில் ரெடியாகும் 120 பேர் கொண்ட வேட்பாளர்கள் லிஸ்ட்! பரபரக்கும் களம்
சென்னை: மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்தி முடித்த கையோடு 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளையும் சத்தமின்றி தொடங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
தமிழகம் புதுவை என 40 தொகுதிகள் உள்ள நிலையில் ஒரு தொகுதிக்கு 3 பேர் கொண்ட லிஸ்ட் என மொத்தம் 120 பேர் கொண்ட லிஸ்ட் தயாராகி வருகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு 10 தொகுதிகள் வரை கொடுத்துவிட்டு 30 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கவும் அதிமுக தயாராகி வருகிறது.

பிறகு எதற்கு எடப்பாடி பழனிசாமி 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் லிஸ்ட் தயார் செய்கிறார் என்ற கேள்வி எழலாம். அரசியலில் எதுவும் எப்போதும் நிகழலாம் என்பதால் முன் ஏற்பாடாக 40 தொகுதிகளுக்கும் 3 பேர் அடங்கிய வேட்பாளர்கள் லிஸ்ட் தயார் செய்யப்படுகிறதாம்.
மாவட்டச் செயலாளர்கள் தன்னிடம் கொடுக்கும் வேட்பாளர்கள் பட்டியலை தனது சோர்ஸ்கள் மூலம் க்ராஸ் செக் செய்யும் நடவடிக்கைகளையும் எடப்பாடி பழனிசாமி முன்னெடுப்பார் எனத் தெரிகிறது. பணம், சமூக பலம், உள்ளூர் செல்வாக்கு, விசுவாசம், என பல படிநிலைகளை ஆராய்ந்தே வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் தங்கம் வாரிசுகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் சீட் எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில், அவர்களை எப்படி எடப்பாடி பழனிசாமி சமாளிக்கப் போகிறார் எனத் தெரியவில்லை.
இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நாடாளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது, யாருடன் கைகோர்ப்பது என மிகுந்த குழப்பத்தில் இருந்து வருகிறது. சசிகலாவிடம் இருந்து பாசிட்டிவ் பதில் ஏதும் வராததால் ஓ.பன்னீர்செல்வம் அப்செட் ஆகியிருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications