ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை.. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் குறித்த கேள்விக்கு எடப்பாடி ரியாக்ஷன்
சென்னை: தமிழ்நாட்டை பாதிப்பதை மாதிரியோ, வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்குகிற மாதிரியோ ஏதாவது நடந்தால், தமிழ்நாட்டில் இருக்கின்ற நாங்கள் அனைவரும் சும்மா இருக்க மாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசிய நிலையில், " முதல்வர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் பேசுகிறார்.. தோல்வி பயத்தின் வெளிப்பாடு தான் இதைக் காட்டுகிறது என்றும், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்ட உள்ளது என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கை. அந்த கோரிக்கையை இப்போது நிறைவேற்றுகிறார்கள்.. இது பொறுத்துக்கொள்ள முடியாததால் ஏதேதோ பேசுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான சிறப்பு விவாதம் நடக்கவுள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் அனல் பறக்க நடந்து கொண்டு இருக்கும் நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட்டப்படுவது விவாதமாகி இருக்கிறது.

சும்மா இருக்க மாட்டோம்
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இவ்விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தமிழ்நாட்டின் வாசல் வரை வந்துவிட்ட பேராபத்து பற்றி சொல்லவும், மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும் தான் இந்த வீடியோ.
தேர்தல் பிரச்சாரத்திற்காக அல்லாமல், ஓடிக்கிட்டே இருந்தால், இந்த கடமை தவிர்க்க முடியாதது. நாளை மறுநாள் ஏப்ரல் 16 ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது. தமிழ்நாட்டை பாதிப்பதை மாதிரியோ, வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்குகிற மாதிரியோ ஏதாவது நடந்தால், தமிழ்நாட்டில் இருக்கின்ற நாங்கள் அனைவரும் சும்மா இருக்க மாட்டோம்.
எடப்பாடி பழனிசாமி பதில்
தமிழ்நாடே ஸ்தம்பிக்கும். தமிழ்நாடு தனது எதிர்ப்பை கடுமையாக காட்டும். முதல்வரான என்னுடைய தலைமையில் தமிழ்நாடே போராடும். ஒவ்வொரு தெருவிலும் குடும்பம் குடும்பமாக மக்கள் போராடுவார்கள். இதனை பிரதமர் மோடிக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன் என்று எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் வேண்டுமென்றே கூட்டப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
தோல்வி பயத்தின் வெளிப்பாடு தான் இதைக் காட்டுகிறது. நாடாளுமன்றத்தை கூட்டுவது மத்தியில் இருக்கின்ற ஆட்சியாளர்கள். மொத்தமாக இப்போது 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் நடக்கவில்லை. இப்போது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்ட உள்ளது என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கை. அந்த கோரிக்கையை இப்போது நிறைவேற்ற உள்ளார்கள்.
தேர்தல் தோல்வி பயத்தில்
இந்த தருணம்.. ரொம்ப முக்கியமான தருணம்.. அதனை அவரால் (முதல்வர் ஸ்டாலினால்) பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இப்போது பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கிறது என்பது பல ஆண்டுகளாக பெண்கள் எதிர்பார்த்து இருந்தது. இதனை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகளாக பெண்கள் கோரிக்கை வைத்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் இவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தேர்தல் தோல்வி பயத்தில் தான் இப்படி அவர் பேசுகிறார்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications