எப்போதும் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது: எடப்பாடி பழனிசாமி விளாசல்
சென்னை: மத்திய அரசு எப்போதுமே தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பானமையுடன் தான் நடத்துகிறது என அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பதை செப்டம்பர் மாதமே தெளிவுபடுத்திவிட்டோம். பாஜக உட்பட எந்த ஒரு தேசிய கட்சியுடனும் அதிமுக கூட்டணி வைக்காது. தேசிய கட்சிகளின் ஆட்சியில் மக்கள் விரோத செயல்களைக் கூட கூட்டணி தர்மத்துக்காக ஆதரிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது.

தேசிய கட்சிகளை நாம் கூட்டணியில் அங்கம் வைத்து கொள்கிறோம். அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிடுவார்கள். பிறகு தமிழ்நாட்டுக்கு விரோதமாக செயல்படுகின்றனர். இதனால் நமக்குதான் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகையால்தான் தேசிய கட்சிகளை நம்பி பயனில்லை.
அதிமுக ஆட்சிக் காலத்திலும் வார்தா புயல் உள்ளிட்ட பல புயல்கள் வந்துள்ளன. அப்போது புயல் வேகத்தில் செயல்பட்டு, புயலின்அடிச்சுவடே இல்லாமல் பணி செய்தோம்.
எப்போதுமே மத்திய அரசு தமிழ்நாடு கேட்கும் நிதியை வழங்குவதே இல்லை. அது காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் பாஜக ஆட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்கான போதுமான நிதியை வழங்குவதில்லை. தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு கொடுத்ததாக சரித்திரமே இல்லை.
தமிழ்நாட்டை மத்திய அரசு எப்போதும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்துகிறது. தமிழ்நாட்டுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு தமது கடமையை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
தமிழ், தமிழ் என்று பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியா கூட்டணி கூட்டத்தில் இந்தியை மொழிப்பெயர்க்கூடாது என்று நிதிஷ்குமார் கூறிய போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தார்? மதுரை அதிமுக மாநாட்டை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவர் அறிவித்த மாநாடுதான் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. அவரால் அறிவித்த தேதியில் மாநாட்டை நடத்த முடியாமல் போயிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.












Click it and Unblock the Notifications