பாஜகவை கடுமையாக வெறுப்பேற்றனும்... புதிய கூட்டணி பெயர் குறித்து எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை!
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடனான கூட்டணியை முறிப்பதில் உறுதியாக உள்ளார். இதனையடுத்து அதிமுக தலைமையிலான புதிய கூட்டணிக்கான பெயர் குறித்து மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை முதலில் விமர்சித்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. அப்போது அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டிய எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக கண்டனத்தை நிறைவேற்றினார். அப்போது இருதரப்பு பிரச்சனை சற்று ஓய்ந்தது.

அண்ணா மீதான விமர்சனம்: இதனைத் தொடர்ந்து அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா மீது கை வைத்தார். இது விஸ்வரூபம் எடுத்தது. அதிமுக தலைவர்கள் மிக கடுமையான வார்த்தைகளில் அண்ணாமலையை கண்டித்துப் பார்த்தனர். ஆனாலும் அண்ணாமலை தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இதனால் அதிமுக- பாஜக கூட்டணி முறிந்ததாக அறிவிக்கப்பட்டது.
அண்ணாமலை அடம்: அப்போதும் அண்ணாவையும் பேசுவேன், பெரியாரையும் பேசுவேன் என அண்ணாமலை மீண்டும் சீண்டினார். இந்த நிலையில் அதிமுக தரப்பில் மற்றொரு சமாதான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனையும் அண்ணாமலை ஏற்காததாலேயே அதிமுக தலைவர்கள் டெல்லிக்கு சென்று பாஜக மேலிடத்திடம் புகார் கொடுத்தனர். இதுவும் ஒர்க் ஆகவில்லை.
மீண்டும் திட்டவட்ட அறிவிப்பு: இதனையடுத்தே பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்கிற செப்டம்பர் 18-ந் தேதி நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என நேற்று அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் அறிவித்தார். அத்துடன் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார்.
புதிய கூட்டணி பெயர்: பாஜகவுடனான கூட்டணி இல்லை என்கிற முடிவில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமையிலான புதிய கூட்டணி குறித்த விவாதங்களையும் நடத்த தொடங்கிவிட்டாராம். புதிய கூட்டணிக்கு எப்படி பெயர் இருக்க வேண்டும்? பாஜகவுடன் தொடர்பே இல்லாத போது பாஜகவை வெறுப்பேற்றும் வகையிலான மதச்சார்பின்மை போன்ற வார்த்தைகள் இடம் பெற வேண்டும் என்பது எடப்பாடியின் ஆலோசனையாம்.
புதிய கூட்டணியில் கட்சிகள்: மேலும் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமையும் போது எந்தெந்த கட்சிகள் இணைய வாய்ப்பிருக்கிறது? திமுக கூட்டணியில் இருந்து எத்தனை கட்சிகளை இழுக்க முடியும்? என்கிற கணக்குகளுடன் சில பல லாபிகளையும் இப்போதே எடப்பாடி தரப்பு தொடங்கி இருக்கிறது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்!












Click it and Unblock the Notifications