எடப்பாடி சாதி வெறி பிடித்தவர்.. வேலுமணி சிறைக்கு செல்வார்.. கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி
சென்னை: எடப்பாடி சாதி வெறி படித்தவர் என்று திமுகவைச் சேர்ந்த கோவை செல்வராஜ் ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். வேலுமணி சுகுணா மில்லில் வேலைபார்த்தவர் என்றும், 13 வருசத்தில் எப்படி இவ்வளவு பெரிய ஆளாக வரமுடியும். வேலுமணி தனது தவறுகளை மூடி மறைக்க முடியாது. கண்டிப்பாக சிறை செல்வார் என்றும் கூறினார்.
அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் சேர்ந்தவர் கோவை செல்வராஜ், இவர் ஒன்இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது கோவை செல்வராஜ் கூறுகையில், தமிழ்நாடு அரசுக்கு காவிரி டெல்டாவில் நிலக்கரி எடுக்க போகிறோம் என்று மத்திய அரசு கடிதம் எதுவும் அனுப்பவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கே வராமல் நேரடியாக மத்திய அரசு நிலக்கரி எடுப்பது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தது என்றார். அப்போது குறுக்கிட்ட நெறியாளர், முதலமைச்சருக்கு தெரியாமல் எப்படி மத்திய அரசு அறிவிக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார், ஏனெனில் அவரும் முதல்வராக தமிழகத்தில் இருந்திருக்கிறார் என்றார்.

எடப்பாடி: அதற்கு கோவை செல்வராஜ், துப்பாக்கிச்சூடு நடத்த தூத்துக்குடியில் அனுமதி கொடுத்துவிட்டு, டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதாக அப்பட்டமாக கூறியவர் எடப்பாடி பழனிசாமி, அந்த மாதிரி தகுதியில்லாதவர் சொல்வதை எல்லாம் கேட்கிறீர்கள். எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கட்சி தலைவராக இருக்கக்கூட தகுதி இல்லை. அவருக்கு பொதுச்செயலாளராக யார் அங்கீகாரம் கொடுத்தது.அவரே அவரை பற்றி சொல்லிக்கொள்கிறார். வடிவேலு ஜீப்பில் ஏறி நானும் ரவுடி நானும் ரவுடி என்று சொல்வாரே,அதை யாரும் ஏற்க மாட்டார்கள்.அந்த மாதிரி பொதுச்செயலாளர் என்று அறிவித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர்கள் என்ன கட்சியாக நடத்துகிறார்கள், அந்த கட்சி என்னமோ ஆகிட்டு போகட்டும்.இப்போது இபிஎஸ் ஒரு கடை,ஒபிஎஸ் கடை, டிடிவி ஒரு கடை,சசிகலா ஒரு கடை என சந்தைக்கடை போட்டிருக்காங்க.. நாளை வானதி சீனிவாசனின் ஆதரவாளர்களான தங்கமணி வேலுமணி ஒரு கடைக்கூட போடலாம். ஏன் சிவி சண்முகமும் ஜெயகுமாருமே ஒரு கடை போடலாம்..

ஆன்லைன் ரம்மி: ஆளுநர் ஆன்லைன் ரம்மி மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறாரே, அதற்கு எதிராக ஏன் எடப்பாடி பழனிசாமி போராடவில்லை. நிலக்கரி எடுக்கும் விவகாரத்தில் காவிரி டெல்டா பகுதியை வஞ்சிப்பதாக அறிவித்து பாஜகவுடன் இனி கூட்டணியே இல்லை என்று அறிவிக்கலாமே, ஏன் அப்படி சொல்வது இல்லை. பாஜகவை ஏன் இவர்கள் எதிர்ப்பதே இல்லை என்றார். அப்போது காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் போராடினார்களே என்று நெறியாளர் கேட்க,அதற்கு பதில் அளித்த கோவை செல்வராஜ், மோடி தனக்கு எதிராக இருந்த விஷயங்களை மறைக்க அதிமுகவை போராடுமாறு கூறினார். அவை ஸ்கிரிப்டேடு, மோடி ஒரு குச்சி எடுத்து தாவ சொன்னால், ஒபிஎஸ் ஒரு பக்கமும், இபிஎஸ் ஒரு பக்கமும் குட்டிக்கரணமே போடுவார்கள் என்று கட்டாமாக செல்வராஜ் கூறினார்.

வேலுமணி சிறை: அப்போது நெறியாளர் பேசும் போது, வேலுமணி சிறை செல்வார் என ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது கூறினாரா? அது எப்போது நடக்கும் என்று கேட்டார். அதற்கு செல்வராஜ், அது கண்டிப்பாக நடக்கும். சுகுணா மில்லில் வேலைபார்த்தவர். 13 வருசத்தில் எப்படி இவ்வளவு பெரிய ஆளாக வரமுடியும். அவர் தனது தவறுகளை மூடி மறைக்க முடியாது. 60 கோடி சொத்து சேர்த்ததற்கே ஜெயலலிதா சிறைக்கு சென்றார்,இவர் பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்திருக்கிறார். எனவே மறைக்கவே முடியாது.. இவருடைய நண்பர்கள் உறவினர்கள் என 70 , 80 பேரிடம் சொத்து இருக்கிறது. இதை கண்டுபிடித்துதான் செய்ய முடியும். குற்றச்சாட்டுகளை முறையாக பதிவு செய்தே நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
சாதி வெறி எடப்பாடி: கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிறார்களே என்று நெறியாளர் கேட்டார். அதற்கு பதில் அளித்த செல்வராஜ், அங்கு ஓட்டை விழுந்து பல நாட்கள் ஆகிவிட்டது. கோவையில் திமுக தான் மாநகராட்சியில் ஜெயித்து மேயராக உள்ளது. கோட்டை என்று கூறும் அதிமுக, 2019 தேர்தலில் கொங்கு மண்டலத்தில் எங்குமே ஜெயிக்கவில்லை ஏன். பாஜக உடன் கூட்டணி வைத்ததுதான் காரணம். 2024 தேர்தலில் டெபாசிட் கூட வங்கமாட்டார்கள். அதுதான் அதிமுகவின் கடைசி தேர்தலாக இருக்கும். எடப்பாடி பழனிசாமி,சரியான ஆம்பிள்ளையாக இருந்தால் இப்போது ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் எடப்பாடி தொகுதியில் ஜெயிக்க சொல்லுங்கள். அவர் ஜெயித்துவிட்டால் என் பெயரையே மாற்றிக் கொள்கிறேன். எடப்பாடி சாதி வெறிபிடித்தவர். அவர் எல்லா சமுதாயத்திற்கும் பொதுவானவர் என்று சொல்வது இல்லை என செல்வராஜ் குற்றம்சாட்டினார். முழு பேட்டியினை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பாருங்கள்,.
-
ஓபிஎஸ்ஸின் Ex ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர் எம்பிக்கு பதவி! அப்போ காளியம்மாளுக்கு? -
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி!












Click it and Unblock the Notifications