ரூ.1.10 கோடி கேட்டு அவதூறு வழக்கு போட்ட எடப்பாடி.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன்னை அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலின் ரூ 1.10 கோடி நஷ்டஈடாக தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்குத் தொடர்ந்தார். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதிலை இங்கே பார்க்கலாம்.
கடந்த 3 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உதயநிதி, இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என போடாமல் ஒழிப்பு மாநாடு என போட்டுள்ளீர்கள்.

எனக்கு இந்த தலைப்பே மிகவும் பிடித்துவிட்டது. சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, கொரோனா, மலேரியா ஆகியவற்றை நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும்" எனக் கூறியிருந்தார். உதயநிதியின் இந்த பேச்சு தேசிய அளவில் விவாதப் பொருளாகிவிட்டது. பாஜகவினர், இந்து அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
மேலும் உதயநிதியின் தலையை சீவினால் ரூ 10 கோடி தருவதாக அயோத்தி சாமியார் தெரிவித்திருந்தார். மக்கள் பிரச்சினையை திசைத் திருப்பவே சனாதனம் குறித்து உதயநிதி பேசியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உதயநிதி தனது அறிக்கையில் 'சனாதனம் என்றால் என்ன' என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக் கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை - கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒளிந்திருக்க முடியாது.
ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் உதயநிதியின் இந்த கருத்துக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார். தன்னை பற்றி அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். உதயநிதி தன்னை பற்றி பேசியதற்கு நஷ்ட ஈடாக ரூ 1.10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வழக்கு விசாரணைக்கு பட்டியலிப்படும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி எதற்காக ரூ.1.10 கோடி கேட்டு அவதூறு வழக்கு போட்டு உள்ளார் என எனக்கு தெரியவில்லை. நான் நிகழ்ச்சியில் இருந்தேன். வழக்கறிஞர்களிடம் கேட்கிறேன். நான் எதுவும் எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசவில்லை. ஒருவேளை சனாதனத்தை எதிர்த்து பேசியதால் அவருக்கு மனது கஷ்டமாகி விட்டது என நினைக்கிறேன்" என்றார்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications