Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேங்மேன் பணி விவகாரம்.. இளைஞர்களின் வாழ்க்கையை பலியாக்க வேண்டாம்! எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணிகளுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்கிட வேண்டும் என்றும், போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு மின்வாரியத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்த முயற்சிகள் போதுமானதாக இருக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக கேங்மேன் எனப்படும் கள உதவியாளருக்கான காலிப்பணியிடங்கள் 60,000க்கும் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில், கடந்த 2019ம் ஆண்டு இதற்கான ஆட்தேர்வு நடத்தப்பட்டது.

Edappadi Palaniswami urges immediate assignment orders to those selected for gangman jobs

உடல் தகுதி தேர்வில் மொத்தம் 1 லட்சம் பேர் பங்கேற்றிருந்தனர். இதில் 15,000 பேர் தேர்வடைந்திருந்தனர். அதில் உடனடியாக 10,000 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. ஆனால் மீதம் உள்ள 5,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று கோரிக்கைள் எழுந்தன. அப்போதைய அதிமுக அரசு அதை ஏற்றுக்கொண்டு பணி நியமன ஆணையை வழங்குவதாக கூறியது. ஆனால் தற்போது வரை வழங்கவில்லை.

இப்படி இருக்கையில், பணி ஆணை கிடைக்கப்பெறாதவர்கள் ஒன்று சேர்ந்து கொளத்தூரில் எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 800 இளைஞர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், "கேங்மேன் பணிகளுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்கிட வேண்டும்" என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "அம்மாவின் அரசில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணி செய்வதற்குத் தேவையான உடல் தகுதியுள்ள ஆட்கள் தேவைப்பட்டதால், 'கேங்மேன்' என்ற புதிய பணியிடம் தோற்றுவிக்கப்பட்டது. அதன்படி, கேங்மேன் பதவிக்காக 2019ம் ஆண்டு உடற்கூறு தகுதித் தேர்வினை (Physical Test) 100 சதவீத நேர்மையுடன் அம்மாவின் அரசு நடத்தியது. இந்தத் தேர்வை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சிகளும், அவர்களைச் சார்ந்த தொழிற்சங்கங்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டன.

கேங்மேன் பணிகளுக்கான உடற்கூறு தேர்வு 'முழுமையாக ஒளிப் பதிவு செய்யப்பட்டதையும், 100 சதவீதம் நேர்மையுடன் நடைபெற்றதையும்' அம்மாவின் அரசு விளக்கமாக எடுத்துக் கூறியதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் கேங்மேன் தேர்வுக்கு விதித்த தடையாணையை ரத்து செய்தது. நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து, அம்மாவின் அரசு கேங்மேன் பணியிடங்களுக்கான நபர்களைத் தேர்வு செய்யும் பணியினை வெளிப்படையாக நடத்தியது.

கொரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகு, அம்மாவின் அரசு 22.2.2021 அன்று, 9,613 நபர்களுக்கு கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்கியது. தொடர்ந்து 5.237 நபர்களுக்கு கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கு தயார் நிலையில் இருந்தபோது, 2021 தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலுக்கான Code of Conduct அமலுக்கு வந்ததால், அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.

திமுக அரசு பதவியேற்றவுடன், அம்மா அரசால் கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான 5,237 நபர்கள், தங்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டி அமைதியான முறையில் பல போராட்டங்களை நடத்தி விடியா திமுக அரசின் கவனத்தை ஈர்த்து வந்தனர். அவர்களது தொடர் போராட்டத்தையடுத்து, தமிழ் நாடு மின்சார வாரியத் தலைவர், அவர்களுடைய கோரிக்கையை பரிசீலிப்பதற்காக ஒரு கமிட்டி அமைத்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தார். கமிட்டி அமைக்கப்பட்டு அதன் முடிவு மின்சார வாரியத்தின் முழு பெஞ்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகும், தங்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்காமல் வீண் காலதாமதம் செய்வதாக, போராடியவர்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் தெரிய வருகின்றன.

மேலும் 10.5.2023 அன்று மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில், மின்சாரத் துறை பணியார்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையின் போது, அனைத்துத் தொழிற்சங்கங்களும், கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான அனைவருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், அப்போதைய மின்துறை அமைச்சர், பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அனைத்துத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம், கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான அனைவருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்குவதாக உறுதி அளித்தார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், அமைச்சர் கூறியபடி இன்றுவரை தங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படாததால், தங்களது கோரிக்கையினை முதலமைச்சரின் பார்வைக்குக் கொண்டு செல்லும் வகையில், கடந்த 20.9.2023 அன்று கொளத்தூரில், முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு, கேங்மேன் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். அப்போது காவல்துறை அவர்களைக் கைது செய்தது.

மேலும், போராடிய அனைவருக்கும் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பணிகளை காவல்துறை மேற்கொண்டு வருவதாகவும், இவ்வாறு அமைதியான வழியில் போராடிய தங்களுக்கு காவல் துறை சம்மன் வழங்கினால், தங்களது எதிர்காலமே பாழாகிவிடும் என்றும், அரசு வேலை மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு பறிபோய்விடும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அச்சம் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிய வருகின்றன.

அம்மா அவர்கள் மறைவிற்குப் பிறகு, 2017-ஆம் ஆண்டு எனது தலைமையிலான அம்மாவின் அரசு பதவியேற்ற நாளில் இருந்து, அம்மா ஆட்சியின் இறுதிநாள் வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் என பல்லாயிரக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றன. இப்போதுள்ள அதே காவல்துறைதான் எங்களது ஆட்சியிலும் இருந்தது. ஆனால், அம்மாவின் அரசு அனைத்துப் போராட்டங்களையும் சட்டப்படி கையாண்டது. யார் மீதும் பழிவாங்கும் நோக்கத்தில், குறிப்பாக போராடிய இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கும் வகையில் எந்தவிதமான நடவடிக்கையிலும் எனது தலைமையிலான அம்மாவின் அரசு ஈடுபடவில்லை.

திமுக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதலமைச்சரின் தொகுதியிலேயே, கேங்மேன் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் போராட்டம் நடத்திவிட்டார்கள் என்ற எண்ணத்தில், அவர்களுக்கு சம்மன் வழங்க முயற்சிக்கும் திமுக அரசின் காவல்துறை, அம்முயற்சியை கைவிட வேண்டும் என்றும், தங்களது எதிர்காலத்திற்காகப் போராடும் இளைஞர்களுடைய வாழ்வினை பலியாக்கும் எந்தவித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று காவல் துறையை வலியுறுத்துகிறேன்.

மேலும், கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான 5,237 இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு உடனடியாக கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்க, விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+