2 தொகுதி இடைத்தேர்தல்.. சபதம் எடுத்த எடப்பாடி பழனிசாமி.. ஆதரவாக வந்த ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கட்டாயமாக வெல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சபதம் எடுத்து பணிகளை தொடங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. விஜய் அலை வீசிய போதே 2 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியதால், இம்முறை தவெகவை எதிர்கொள்ள கூடுதல் நிர்வாகிகள் அங்கு பணியாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், அத்தனை கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். இந்த இடைத்தேர்தலில் தவெக எந்த அளவிற்கு வெல்ல வேண்டியது கட்டாயமோ, அதே அளவிற்கான கட்டாயம் அதிமுகவுக்கும் உள்ளது.

Edappadi Palaniswami AIADMK Bypolls

ஏனென்றால் சட்டசபைத் தேர்தலிலேயே அதிமுக தான் இந்த 2 தொகுதிகளையும் கைப்பற்றியது. அதிமுக உறுப்பினர்கள் மரதகம் குமரவேல் மற்றும் திலகபாமா ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர். இதனால் அதிமுக தரப்பில் நேற்றே விருப்ப மனுக்கள் வாங்க தொடங்கிவிட்டனர். நாளையுடன் விருப்ப மனு விநியோகம் முடிவுக்கு வரவுள்ளது.

இதன்பின் திங்கட்கிழமைக்குள் வேட்பாளர்கள் அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தரப்பில் பெரும்பாலும் மரகதம் குமரவேல் மற்றும் திலகபாமாவுக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையே இந்த 2 தொகுதிகளிலும் அதிமுக கட்டாயம் வெல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சபதம் எடுத்து பணிகளை தொடங்கி இருக்கிறார்.

6 அதிமுக எம்எல்ஏ-க்கள் துரோகம் செய்துவிட்டு, தவெக பக்கம் சென்றுவிட்டனர். அவர்களுக்கும், தவெகவுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் மத்தியில் பேசி வருகிறார். அதேபோல் இடைத்தேர்தல் நடக்கவுள்ள 2 தொகுதிகளிலும் அதிமுக சார்பாக கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தாராபுரம் தொகுதி அதிமுகவுக்கு சாதகமாக இருந்தாலும், மதுராந்தகம் தொகுதியின் வெற்றி பாமக கையில் தான் இருக்கிறது. இதனால் பாமக உடனான கூட்டணியை உறுதி செய்வதோடு, அன்புமணியை பிரச்சாரத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். மறுபக்கம் சோசியல் மீடியா விஷயங்களில் அதிமுக கூடுதல் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமியும் இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அதிகரித்து பணிகளை வேகப்படுத்த இருக்கிறார். இந்த 2 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வென்றுவிட்டால், லோக்சபா தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற முடியும் என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறார். அதேபோல் கட்சியையும் தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதிலும் தீவிரமாக உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+