எடப்பாடி பழக்கமே அதுதான்.. இரட்டை இலை இல்லாமல் போய் விடும்.. கொளுத்தி போடும் டிடிவி தினகரன்
சென்னை: வரும் காலத்தில் அதிமுகவில் நிறைய மாற்றம் வரும். இரட்டை இலை இருந்தும் இரட்டை இலையை பலவீனமாக்கி கொண்டு இருக்கிறார். வரும் காலத்தில் அந்த கட்சி சின்னாபின்னமாக அனைத்து வாய்ப்புகளும் உள்ளது என்று டிடிவி தினகரன் கூறினார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். எடப்பாடி பழனிசாமிக்கு எப்போதுமே நம்பிக்கை துரோகம் செய்துதான் பழக்கம். வரும் காலத்தில் அதிமுகவில் நிறைய மாற்றம் வரும். இரட்டை இலை இருந்தும் இரட்டை இலையை பலவீனமாக்கி கொண்டு இருக்கிறார். வரும் காலத்தில் அந்த கட்சி சின்னாபின்னமாக அனைத்து வாய்ப்புகளும் உள்ளது என்றார். இது தொடர்பாக டிடிவி தினகரன் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:-

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக உதவியால்தான் பழனிசாமியின் ஆட்சியே காப்பற்றப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போதும் மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பாஜகவை காட்டித்தான் இங்கே இருக்கும் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் தன்வசப்படுத்தி வைத்து இருக்கிறார்.பொதுச்செயலாளராக தன்னிசையாக அறிவித்தது கூட...நீதிமன்றங்களில் சட்டத்தை தான் பார்ப்பார்கள். பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையைத்தான் பார்ப்பார்கள்.
அதனால் நீதிமன்றங்கள் சொல்லியிருந்தாலும் எடப்பாடி பழனிசாமியை பாஜக கைவிட்டு விட்டது என்றால் இரட்டை இலை இல்லாமல் போய்விடும். இரட்டை இலை இல்லாமல் போகும் நேரத்தில் அதிமுக நெல்லிக்காய் மூட்டை போல சிதறிவிடும். நாங்கள் ஜனநாயக முறைப்படி போராடி வெற்றி பெறுவோம். லோக்சபா தேர்தலிலோ, சட்டமன்ற தேர்தலிலோ வெற்றி பெற்றிருந்தால் மாற்றங்கள் வந்து இருக்கும். வெற்றி பெற முடியவில்லை.

இதை நான் பின்னடைவாக பார்க்கவில்லை. அனுபவமாக பார்க்கிறேன். வரும் காலத்தில் வெற்றி பெறுவதற்கு ஊக்கத்துடன் பெரு முயற்சி எடுப்போம். அதிமுகவை பாஜக கைவிட்டு விட்டால் அதிமுக சின்னாபின்னமாகிவிடும். அதுதான் உண்மை. எடப்பாடி பழனிசாமியே தனது தலையில் கொள்ளிக்கட்டையை எடுத்து சொறிய ஆரம்பித்து விட்டார். அவருக்கு எப்போதுமே நம்பிக்கை துரோகம் செய்துதான் பழக்கம்.
அவரை முதல்வராக்கியவரையே நாயே.. பேயே என்ற அளவுக்கு பேசினார். அவர் ஆட்சியை காப்பாற்றி கட்சியை காப்பாற்றி கொடுத்த பாஜகவுக்கு இன்றைக்கு நன்றிக்கடன் செலுத்துகிறார். அதற்கான தண்டனையை அனுபவித்துதானே ஆக வேண்டும். வரும் காலத்தில் அதிமுகவில் நிறைய மாற்றம் வரும். இரட்டை இலை இருந்தும் இரட்டை இலையை பலவீனமாக்கி கொண்டு இருக்கிறார். வரும் காலத்தில் அந்த கட்சி சின்னாபின்னமாக அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications