ஓபிஎஸ் வருகையால் பட்டென வெளியேறிய சிவி சண்முகம், ஜெயக்குமார் ?.. அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு
சென்னை: சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வருவதை அறிந்த சிவி சண்முகம், ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுக் குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து தலைமை கழக நிர்வாகிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வந்தனர்.

11 பேர் கொண்ட குழு
11 பேர் கொண்ட இந்த குழு ஆலோசனை நடத்தி வரும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் புறப்பட்டார். இதை அறிந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை வரவேற்க தலைமை அலுவலகம் முன்பு திரண்டனர். இந்த நிலையில் ஓபிஎஸ் வருவதை உள்ளே இருந்த எடப்பாடி ஆதரவாளர்கள் அறிந்ததாக தெரிகிறது.

ஓபிஎஸ் வருகை
இதையடுத்து ஆலோசனை கூட்டத்தை ஓபிஎஸ் வருவதற்குள் முடித்துக் கொண்டதாக தெரிகிறது. மேலும் சிவி சண்முகம் முதலில் வெளியே வந்து வேகமாக புறப்பட்டுச் சென்றார். அவரை தொடர்ந்து ஜெயக்குமாரும், வளர்மதியும் வெளியே வந்து புறப்பட்டனர். அப்போது ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

யாரும் தடை கோர முடியாது
அவர் கூறுகையில் பொதுக் குழு கூட்டத்தில் என்னென்ன நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தோம். அதிமுக பொதுக் குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும். யாரும் தடை கோர முடியாது என்றார். அப்போது ஓபிஎஸ் வருவதற்குள் கூட்டத்தை அவசர அவசரமாக முடித்துவிட்டீர்களே என செய்தியாளர்கள் கேட்டனர்.
Recommended Video

கூட்டம்
அதற்கு ஜெயக்குமார் கூறுகையில் அப்படியெல்லாம் இல்லை. வரும் 18 ஆம் தேதி மீண்டும் கூட்டம் நடைபெறுகிறது. ஒற்றைத் தலைமை எனும் விஷயம் நடந்தாலும் நடக்கும் நடக்காமலும் இருக்கலாம் என பதில் அளித்தார். ஜெயக்குமார், வளர்மதி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் அவசரமாக வெளியேறியதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்தனர். அதிமுக பொதுக் குழுவில் விவாதிக்கப்பட வேண்டியது குறித்து ஓபிஎஸ் இன்றைய தினம் கிரீன்வேஸ் சாலையில் ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications