Edappadi Palaniswami: கண்கலங்கிய எடப்பாடி.. நிர்வாகிகள் முன்பே தாரைதாரையாக கண்ணீர் விட்டது ஏன்? எமோஷனல் ஆனதன் பின்னணி
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான ‛இதயக்கனி' திரைப்படத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுடன் பார்த்தார். திரைப்படத்தை பார்த்து கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palaniswami) கண்கலங்கினார். கண்களில் இருந்து கண்ணீர் வடிந்த நிலையில் அவர் திரைப்படம் பார்க்கும் வீடியோக்கள் இணையதளங்களில் பரவி வருகிறது.
சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நடித்து வெளியான இதயக்கனி திரைப்படம் ரிரீலிஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் 200 நாட்களை தாண்டி தியேட்டரில் ஓடி வருகிறது. இன்று ‛இதயக்கனி' திரைப்படம் 225வது நாளில் ஓடுகிறது.

225வது நாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுடன் இன்று இதயக்கனி திரைப்படத்தை பார்த்தார்.
நிர்வாகிகளுடன்...
முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணி, செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, ஆர்பி உதயக்குமார், உள்பட பலரும் எடப்பாடி பழனிச்சாமியுடன் ‛இதயக்கனி' திரைப்படத்தை பார்த்தனர்.
கண்கலங்கிய எடப்பாடி
இந்த திரைப்படத்தை பார்த்து கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
உழைக்கும் மக்களே...
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) February 17, 2026
உடன்பிறப்புகளே...
புரட்சித் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களே...!
நம் உயிர்நிகர் #புரட்சித்தலைவர்_எம்ஜிஆர் அவர்கள் நடிப்பில் வெளிவந்து,
சத்யா மூவீஸ் தயாரிப்பில்,
தமிழ்நாட்டின் Industry Hit ஆகி,
இந்திய அளவிலும் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்து, சர்வதேச… pic.twitter.com/lLH9uYWe50
225 நாட்கள் வெற்றிநடை..
இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் ‛இதயக்கனி' திரைப்படம் பார்த்த வீடியோவை பதிவிட்டு, ‛‛ உழைக்கும் மக்களே... உடன்பிறப்புகளே... புரட்சித் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களே...! நம் உயிர்நிகர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்து,
சத்யா மூவீஸ் தயாரிப்பில், தமிழ்நாட்டின் Industry Hit ஆகி, இந்திய அளவிலும் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தத படம்.
சர்வதேச விருதுகளைப் பெற்ற மாபெரும் வெற்றிப் படமாம் இதயக்கனி தற்போது Re-Release ஆகி, 225 நாட்கள் வெற்றிநடைப் போட்டு வரும் நிலையில், இன்று கழக உடன்பிறப்புகளோடு இணைந்து திரைப்படத்தைக் கண்டு மகிழ்ந்தேன்.
25 ஆண்டுக்கு பிறகு திரையரங்கம்
25 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்கம் சென்று, 1975-ல் இதயக்கனி வெளியான போது, கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கி, பலமுறை படத்தைப் பார்த்து, இளைஞனாக ரசித்து மகிழ்ந்த தருணங்களை அசைபோட்டுக்கொண்டே, MGR எனும் மூன்றெழுத்து மந்திரத்தின் காலத்தால் அழியாத திரை ஆளுமைமிக்க நடிப்பை ரசித்தேன்.
தலைவரின் படங்கள், எப்போதும் நமக்கொரு நற்பாடத்தைச் சொல்லும். அதேபோல், இதயக்கனி சொல்லும் சமநீதிச் சமுதாயம் காண, அண்ணா வழி கண்டு நன்மை தேடுவோமாக!'' என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இதயக்கனி பெயர் காரணம்
மேலும் இதயக்கனி திரைப்படத்தின் 225வது நாள் கொண்டாட்ட விழாவில் எடப்பாடி பழனிச்சாமி படத்தின் பெயர் காரணத்தை விளக்கினார். இதுபற்றி எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ‛‛ மதுரையில் பாராட்டு விழா நடந்தது. இதில் அண்ணா பங்கேற்று பேசினார். மரத்தில் ஒரு கனி பழுத்து தொங்கி கொண்டிருந்தது. அது யாருடைய மடியில் விழுமோ என்று பார்த்து கொண்டிருந்தேன்.
நல்ல வேளையாக அந்த கனி என் மடியில் வந்து விழுந்துவிட்டது. அந்த கனியை எடுத்து பத்திரமாக இதயத்தில் வைத்து கொள்கிறேன் என்றார். எம்ஜிஆர் தான் அண்ணாவின் இதயக்கனி. இதனை எல்லா இடத்திலும் சொல்லி பெருமைப்பட்டவர் எம்ஜிஆர். இதனால் தான் அண்ணாவின் நினைவாக இதயக்கனி என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டது'' என்று பேசினார்.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்!











Click it and Unblock the Notifications