"காலத்தின் கட்டாயம்! தடுக்க முடியாது" ஒற்றை தலைமையை நோக்கி எடப்பாடி.. ஆதரவு அதிகரிக்க இதுதான் காரணம்
சென்னை: அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் ஒரு வாரமாகத் தொடரும் நிலையில், கட்சியில் பலரும் எடப்பாடி பக்கம் சாய்ந்துள்ளனர்.
Recommended Video
அதிமுகவில் இப்போது உட்கட்சி விவகாரம் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது என்றே கூறலாம். கடந்த வாரம் தீர்மானக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் இந்தப் பேச்சு தொடங்கியது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதைச் செய்தியாளர்கள் சந்திப்பில் சொல்ல, உடனடியாக பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஒற்றை
அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வமும் தொடர்ச்சியாக தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒற்றை தலைமை என்பதில் இந்த முறை எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச்செயலாளர் பதவி அளிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்து தொடங்கினர்.

ஓபிஎஸ்
அதே சமயம் ஓபிஎஸும் இந்த முறை விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது கூட, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாலேயே அதிகாரம் இல்லை என்றாலும் கூட துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்திருந்தார். அதேபோல ஓபிஎஸ் தரப்பில் இருந்து ஜெயலலிதா நம்பிக்கை பெற்றவர் என்ற ரீதியில் முழு பக்க விளம்பரமும் கொடுக்கப்பட்டது.

காலத்தின் கட்டாயம்
இந்தச் சூழலில் பல மூத்த நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்து தங்கள் ஆதரவைக் கொடுத்து வருகின்றனர். அதன்படி நேற்றைய தினம் சென்னை பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அக்கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதிமுகவுக்கு பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பது காலத்தின் கட்டாயம் எனக் குறிப்பிட்ட அவர், திமுகவை உறுதியோடு எதிர்க்க அதிமுகவுக்கு ஒற்றை தலைமை அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

தேனி
இவர் மட்டுமின்றி பல மூத்த அதிமுக நிர்வாகிகளும் வெளிப்படையாக எடப்பாடிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். எடப்பாடி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் என்றும் அதிமுகவின் ஒற்றை தலைமையாக அவர் நிச்சயம் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் முன்னாள் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறி உள்ளார். எல்லாவற்றையும் தாண்டி ஓபிஎஸின் சொந்த மாவட்டமான தேனியில் கூட சிலர் எடப்பாடி பக்கம் சாய்ந்தது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

95% எடப்பாடி ஆதரவு
முன்னதாக நேற்று, திமுகவை வீழ்த்தி அதிமுக ஆட்சியைப் பிடிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையேற்க வேண்டும் என கூறிய திருவொற்றியூர் முன்னாள் எம்எல்ஏ கே.வி. குப்பன், பொதுக் குழு உறுப்பினர்களில் 95% பேர் எடப்பாடிக்கே ஆதரவாக உள்ளனர் என்று தெரிவித்தார். இப்படி கட்சியில் பெரும்பாலானோர் எடப்பாடிக்கே ஆதரவாக இருப்பதால் அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது விரைவில் நடக்கும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

காரணம்
சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது அவருக்கு ஆதரவாகவும் சில எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் சென்றனர். ஆனால் அவர்களுக்கு ஓபிஎஸ் எதுவும் செய்யவில்லை. அவர்கள் கட்சியில் இருந்தும் மெல்ல ஓரம்கட்டப்பட்டனர். அதேநேரம் எடப்பாடி தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி வருகிறார். இதன் காரணமாக இந்த முறை ஓபிஎஸ் பக்கம் செல்ல பலரும் யோசிப்பதாகக் கூறப்படுகிறது.
-
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம்












Click it and Unblock the Notifications