நாளை பள்ளிகள் ஓபன்.. திடீரென கல்வித்துறை போட்ட முக்கிய உத்தரவு.. மாணவர்கள் - ஆசிரியர்களே கவனம்
சென்னை: காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ள நிலையில் பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கடந்த மாதம் 27 ம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 9 நாட்கள் மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

காலாண்டு தேர்வு விடுமுறையை தொடர்ந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இனி வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது. இதனால் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருக்கும். இதனால் மாணவ-மாணவிகளின் நலன் கருதி பள்ளி கல்வித்துறை சார்பில் வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டிவைக்க வேண்டும். அந்த அறைக்கு மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
* மழையின்போது பள்ளியின் சுற்றுச்சுவரின் 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் உள்ள நீர் தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
* பள்ளியில் உள்ள அனைத்து கட்டடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
* பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் பழுதுபட்ட மின்சான பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்'' என பள்ளி கல்வித்துறை சார்பில் வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர்












Click it and Unblock the Notifications