Exclusive: பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது நல்லதுதான்.. ஆனால் கொரோனா குறித்த கவனம் தேவை.. கல்வியாளர்
சென்னை: பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறப்பது நல்ல விஷயம்தான். ஆனால் கவனமாக இருக்க வேண்டும் என கல்வியாளர் ராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து ஒன் இந்தியா தமிழுக்கு கல்வியாளர் ராஜன் அளித்த சிறப்பு பேட்டியில் கூறுகையில், பள்ளிகளையும் கல்லூரிகளையும் திறப்பதற்கான முடிவை எடுத்தது மிகவும் வரவேற்கத்தக்கது. இத்தனை நாட்களாக பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் செல்ல முடியாமல் ஆன்லைன் மூலம் வகுப்பை கவனித்து வந்தனர்.
விளையாட்டு, கேளிக்கை உள்ளிட்டவை இல்லாமல் இருந்த நிலையில் பள்ளிகள் திறப்பு என்பது மிக மிக வரவேற்கத்தக்க ஒன்று. மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் எல்லாம் சிறப்பாக வகுக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் இருந்தாலும் கொரோனாவுக்கு மருந்து கிடையாது. தடுப்பூசி மட்டுமே உள்ளது.

மாணவர்கள்
ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எந்த உணவுகளை சாப்பிட வேண்டும், அவர்கள் அன்றாடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். தங்களது உடல்நலத்தை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்கிற அறிவுறுத்தல் தற்போது மாணவர்களுக்கு தேவை. இது பெற்றோர்களும் செய்ய வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவர்கள்
தற்போது பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆலோசகர்கள், மருத்துவர்கள் தினமும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வந்து மாணவர்கள் உடல்நலத்தை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எதுமாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்? பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அன்றாடம் கவனிக்க வேண்டியது மிக மிக முக்கியமானதொன்று.

கொரோனா 3ஆவது அலை
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி கொரோனா 3ஆவது அலை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வருகின்றன. ஒரு வேளை பள்ளிக்கோ கல்லூரிக்கோ வரும் மாணவர்களுக்கு அவர்களுக்கே தெரியாமல் கொரோனா அறிகுறி இருந்தால் மருத்துவர்களையும் பெற்றோரையும் நிர்வாகத்தினர் அணுகி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும்.
கொரோனாவை கண்டு மாணவர்கள்
மேலும் அந்த தொற்று மற்றவர்களை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். கொரோனா வந்தால் அதை கண்டு மாணவர்கள் பயப்படாதவாறு அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். கொரோனா 3ஆவது அலையை காரணம் காட்டி பள்ளிகளையும் கல்லூரிகளையும் தொடர்ந்து நடத்தாமல் இருக்கவும் இயலாது. அதே வேளையில் ஒவ்வொரு மாணவர்களுடைய உடல்நலம் என்பது மிக மிக முக்கியமானதாகும். மாணவர்களின் உடல்நலனை பெற்றோர் கவனிக்க வேண்டும். பிள்ளைகளுக்கு சளி இருந்தால் கூட மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல வேண்டுமே தவிர தன்னிச்சையாக மருந்து கடைகளில் மருந்தை வாங்கி கொடுக்கக் கூடாது என ராஜன் தெரிவித்துள்ளார்.
-
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications