Egmore: எழும்பூர் ரயில் நிலைய பணிகள் முடிவது எப்போது? மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் பணிகள் நடந்து வந்தது. இதனால் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மின்சார ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலை ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளுக்காக பிளாட்பார்ம் 10 மற்றும் 11-ல் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு பதிலாக 5 மற்றும் 6 வது வழித்தடத்தில் சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயில் சேவை குறைத்து இயக்கப்படுவதால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

மின்சார ரயில் சேவை பாதிப்பு
சென்னையில் மிக முக்கிய ரயில் நிலயங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில் மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. ரயில் நிலையத்தில் பூந்தமல்லி சாலையை நோக்கி உள்ள பகுதியில் பன்னடுக்கு வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. இதற்காக ரயில் நிலையத்தின் நடைமேடை எண் 10 மற்றும் 11 கடந்த மாதம் முதல் மூடப்பட்டது.
புறநகர் மின்சார ரயில்கள் இந்த ரூட்டில் தான் இயக்கப்பட்டு வந்ததால், ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. நடைமேடை 5 மற்றும் 6-ல் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. எனினும், ரயில் சேவை குறைப்பு, சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் சிக்னல்களுக்காக நிறுத்துவது என கடந்த ஒரு மாத காலமாக ரயில் நிலைய பயணிகளை அல்லோலப்படுத்தி வருகிறது தெற்கு ரயில்வே.
எப்போது முடிவடையும்?
ரயில்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதுவதை பார்க்க முடிகிறது. ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் முடித்து எப்போது பழையபடி மின்சார ரயில்கள் இயக்கப்படுமோ என்ற ஆவலுடன் எழும்பூர் ரயில் நிலையத்தை கடந்து செல்லும் பயணிகள் நினைக்காத நாளில்லை என்று சொல்லும் அளவிற்கு பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஏப்ரல் 5 ஆம் தேதியுடன் இந்த பணிகள் முடிக்கப்படும் ரயில்வே அறிவித்து இருந்தது. இதன்படி பணிகளை முடிக்க தொழிலாளர்கள் முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 24 மணி நேரமும் ஷிப்ட் அடிப்படையில் தொழிலாளர்களை நியமித்து ரயில்வே பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
ரயில்வே அதிகாரிகள் விளக்கம்
நடைமேடையில் கூடுதல் வசதிகள், பார்சல் எடுத்து செல்வதற்கான நடை மேம்பாலத்திற்கு அடித்தளம் அமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. ரயிலை இயக்குவதற்கான அனைத்து இறுதி கட்ட பணிகளும் நேற்று முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடைமேடையை சுத்தம் செய்யும் பணிகள், நகரும் படிக்கட்டுகளை சோதனை செய்வது, அறிவிப்பு பலகை வைப்பது என பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால், மின்சார ரயில்கள் சேவை விரைவில் சீராகும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரயில் நிலைய அதிகாரிகள் கூறியதாவது: எழும்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் 10, 11-ல் இருந்து மின்சார ரயில்கள் இயக்கும் வகையிலான அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டது. சிறு சிறு பணிகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது.
எப்போது மின்சார ரயில்கள் இயக்கப்படும்?
5 ஆம் தேதிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் இயக்க முடியும். ரயில் நிலையத்தில் எஞ்சிய பணிகள் நடக்கும் போது ரயில் சேவையில் பாதிப்பு இருக்காது. இதனால், பயணிகளுக்கு இனி இடையூறு ஏற்படாது" என்று தெரிவித்தனர். ரயில்வே அதிகாரிகளின் இந்த அறிவிப்பு பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications