"நாளை முதல் 3 நாள் இண்டர்வியூ".. அழைக்கும் எச்சிஎல் ஐடி நிறுவனம்.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: சென்னையில் இயங்கி வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் நாளை (ஜுலை 6) முதல் 3 நாட்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில், Manual Payments பிரிவில் Associate & Analyst பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பேமெண்ட்ஸ் ஆபரேஷன்ஸ், பேங்கிங் ஆபரேஷன்ஸ், Reconciliation, டிரான்ஸக்சன் புராசஸ் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Swift Payment Messaging Standards உள்ளிட்டவை பற்றி தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறமை இருக்க வேண்டும். மைக்ரோசாப்ட் எக்ஸல், பேங்கிங்/பேமெண்ட்ஸ் புராசஸிங் பிளாட்பார்ம்ஸ் உள்ளிட்டவை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (ஜுலை 6) முதல் ஜுலை 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது HCL Technologies Ltd, ETA 3 No.33, Block 1 Sandhya Info City, OMR Rajiv Gandhi Salai, Navallur, Chennai என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
உடனடியாக பணிக்கு சேர தயாராக இருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அப்டேட்டட் ரெஸ்யூம் உள்பட பிற ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications